மணல் வளத்தை இழந்து முள்காடாக காட்சி அளிக்கும் மானாமதுரை வைகையாறு நிலத்தடி நீர் குறைவதால் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் அபாயம்
Sivaganga
வியாழக்கிழமை,
ஜூலை 28,
7:21 PM IST
0
கருத்துக்கள்
மானாமதுரை, ஜூலை.28-
மானாமதுரை வைகை ஆற்றில் மண்வளம் தொடர்ந்து அழிந்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைஅடிவாரத்தில் இருந்து தொடங்கும் வைகையாறு கிழக்கும், தெற்கு மாய் பாய்வது மானாமதுரையில் மட்டும்தான்.
வெள்ள காலங்களில் மணல் வளம் பெருகும். ஆனால் தொடர்ந்து மணல் குவாரி பலஇடங்களில்அமைத்ததால் மணல் வளம் இன்றி மண்தரையாக வைகையாறு மாறி வருகிறது. மானாமதுரை வைகை ஆற்று ரெயில்பாலம் முதல் பார்தி பனூர் மதகு அணை வரை தற்போதுமணல் இல்லாமல் முள் மற்றும்நாணல் காடுகளாக மாறிவிட்டது.
மானாமதுரை அருகே ராஜ கம்பீரம் வைகையாற்றில் மானாமதுரை குடிநீர்திட்டம் செயல்பட்டு வருகிறது. இதே போல்சிவகங்கைக்கு இதன் அருகே உள்ள முத்தனேந்தல் வைகையாற்றில் குடிநீர் திட்டம் செயல்படுகிறது.
இதே போல் 100க்கும் மேற் பட்ட கிராமங்களில் வைகை கூட்டு குடிநீர்திட்டமும் செயல்படு கிறது. திருப்புவனம் பகுதி வைகை யாற்றில் மணல் குவாரி அமைக்க கிராம மக்கள், விவ சாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், தற்போது பொதுப் பணித்துறைஅதிகாரிகள் மானாமதுரையில் குடிநீர் திட்டங்கள் செயல்படும் பகுதியில் மணல் குவாரி அமைக்க ஆய்வு செய்துள்ளனர்.
இந்த பகுதியில் 10 ஆண்டுகளாக மணல் குவாரிஅமைக்க கூடாது என இந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இதுவரை மணல் குவாரி அமைக்கப்படவில்லை. ஆனால் மணல்குவாரி அமைக்க அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்வதால் மானாமதுரை பகுதி மக்கள் கலெக்டர் ராஜாராமனை சந்தித்து மணல்குவாரி அமைக்க கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.
அதே போல் மானாமதுரை நகர்வைகையாற்றை மதுரையை போல் சுத்தம் செய்து குப்பைகள் கொட்டாமல் தடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்வரவேண்டும். முள்காடாக மாறிவரும் வைகையை சீரமைத்து வளம் தரும் வையாக மாற்ற வேண் டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
0
கருத்துக்கள்