ஜவ்வாது மலையில் கோடைவிழா தொடங்கியது || summer function started in jawadhu hills
Logo
சென்னை 16-09-2014 (செவ்வாய்க்கிழமை)
  • திருச்சி: குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை - மகள் பலி
  • சென்னையில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கனமழை
  • காஷ்மீர் எல்லையில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி
  • சென்னை விமான நிலையத்தில் ரூ. 2 கோடி மதிப்புள்ள போதைபொருள் பறிமுதல்: ஒருவர் கைது
  • குஜராத் இடைத்தேர்தல்: பா.ஜனதா 5, காங்கிரஸ் 4 இடங்களில் முன்னிலை
  • உ.பி. இடைத்தேர்தல்: சமாஜ்வாடி கட்சி 8, பா.ஜனதா 3 இடங்களில் முன்னிலை
  • ராஜஸ்தான் இடைத்தேர்தல்: பா.ஜனதா 2, காங்கிரஸ் 2 இடங்களில் முன்னிலை
ஜவ்வாது மலையில் கோடைவிழா தொடங்கியது
ஜவ்வாது மலையில் கோடைவிழா தொடங்கியது
திருவண்ணாமலை, ஜூலை.2-
 
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் கோடை விழா இன்று தொடங்கியது. வனத்துறை அரசு மேல்நி லைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் கோடை விழாவை உணவுத்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ண மூர்த்தி தொடங்கி வைத்தார். கலெக்டர் அன்சுல் மிஸ்ரா தலைமை தாங்கினார்.
 
நாளை வரை இவ்விழா நடக்கிறது. இதில் அரசு பல்துறை பணிவிளக்க கண்காட்சியும் நடக்கிறது. அரசின் ஒவ்வொரு துறை சார்பிலும் அரங்கங்கள் வைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியை வனத்துறை அமைச்சர் பச்சைமால் தொடங்கி வைத்தார்.
 
அரசு நலத்திட்ட உதவிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் புத்திசந்திரன் வழங்கினார். கோடை விழாவில் காய்கறி, மலர்களால் அலங்காரம் செய்யப் பட்ட வரவேற்பு வளைவுகள் அமைக்கப் பட்டிருந்தது. வனத்துறை, தோட்டகலைத்துறை, வேளாண்மைத்துறை, கால்நடை, சமூகநலம் ஆகிய துறைகளின் சார்பில் பொதுமக்களுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டது.
 
விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ரசித்தனர். இதில் சுற்றுலா அலுவலர் இளங்கோ, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வெள்ளையன், எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்குமார், ஜெயசுதா, சுப்பிரமணியன், அரங்கநாதன், பாபு முருகவேல் போலீஸ் சூப்பிரண்டு சாமுண் டீஸ்வரி, வேலூர் மண்டல வனபாதுகாவலர் வெங்கடாசலம், மாவட்ட வருவாய் அலுவலர் கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - திருவண்ணாமலை