ஊட்டியில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி;கலெக்டர் தொடங்கி வைத்தார் || drug awareness rally Eradication; Collector inaugurated
Logo
சென்னை 28-03-2015 (சனிக்கிழமை)
ஊட்டியில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி;கலெக்டர் தொடங்கி வைத்தார்
ஊட்டியில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி;கலெக்டர் தொடங்கி வைத்தார்
ஊட்டி, ஜுன்.27-
 
ஊட்டியில் நேற்று சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப் புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் தொடங்கி வைத்தார்.  
 
போதை பொருட்களினால் இளைய சமுதாயம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண் டும் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் கடை பிடிக்கப்படுகிறது. நேற்று ஊட்டியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஊட்டி சேரிங்கிராஸ் காந்தி சிலை முன்பு தொடங்கிய பேரணியை மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
 
இதில் போலீஸ் சூப்பிரண்டு காளிராஜ் மகேஸ்குமார், வருவாய் அதிகாரி நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.   பேரணி காந்தி சிலையில் தொடங்கி, கமர்சியல் சாலை, பிரீக்ஸ் பள்ளி சாலை வழியாக ஊட்டி மலைப்பகுதி மேம் பாட்டு திட்ட அரங்கை அடைந்தது. அங்கு போதைப்பொருள் ஒழிப்பு குறித்த கூட்டம் நடைபெற்றது.
 
இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி நாகராஜன் தலைமை தாங்கி பேசியதாவது:-
 
போதைப்பொருட்கள் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். போதைப்பொருள் களினால் ஏற்படும் தீமைகள் குறித்து தெரிந்து கொண்ட மாணவர்கள் பொது மக்களிடம் போதைப்பொருள் தீமைகள் குறித்து விளக்க வேண்டும்.   போதை பழக்கமானது மனிதனின் உள்ளம், உடலை பாதிப்படைய செய்வதுடன், உழைப்பையும் பாழாக்குகிறது.
 
மேலும் குடும்ப ரீதியாக பொருளாதாரத்தை சீரழிக்கிறது. பெற்றோர்கள் குழந்தைகள் முன்பு போதைப்பொருள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தற்போது இளம் வயதில் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது. கல்லூரி மாணவி களிடையே போதைப்பொருள் பயன்படுத்துவது கவலை அளிக்கிறது. போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கத்தை சிதைக்க வேண்டும்.
 
இவ்வாறு அவர் பேசினார்.  
 
நிகழ்ச்சியில் மாவட்ட சூப்பிரண்டு காளிராஜ் மகேஷ்குமார் பேசும்போது கூறியதாவது:-
 
கடந்த காலங்களில் போதை பொருள் பழக்கம் உள்ளவர்கள் சமுதாயத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டனர். இதனால் அவர்கள் திருந்த வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தற்போது அது ஒரு கவுரமாக கருதப்படுகிறது. போதைப்பொருட்களை மாணவர்கள் மட்டும் பயன் படுத்துகிறார்கள் என்பது தவறு. பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவிகளுக்கு குளிர்பானத்தில் போதைப் பொருள் கலந்து கொடுக்கின்றனர். இது போன்ற விஷயங்களில் பெண்கள், மாணவிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
 
இவ்வாறு அவர் பேசினார்.
 
இந்த நிகழ்ச்சியில் குன்னூர் ஆர்.டிஓ. காந்திமதி, அனை வருக்கும் கல்வி இயக்க மாவட்ட திட்ட இயக்குனர் லட்சுமணன், ஊட்டி அரசு கலை கல்லூரி என்.எஸ்.எஸ். திட்ட இயக்குனர் அழகர் ராமானுஜம், துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்ட னர். முன்னதாக உதவி ஆணையர் (கலால்) முபாரக் அலி வரவேற்றார்.
 
முடிவில் ஊட்டி கோட்ட ஆய தீர்வை அலுவலர் பழனிசாமி நன்றி கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - நீலகிரி

section1

பந்த் எதிரொலி: நீலகிரியில் இருந்து கர்நாடகாவுக்கு பஸ்கள் நிறுத்தம்

ஊட்டி, மார்ச்.28–கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் அணைகட்ட முயற்சிப்பதை எதிர்த்து தமிழகம் முழுவதும் இன்று ....»