Recommendations
Recent Activity
கியாஸ் விலை உயர்வு கோவையில், நாளை ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
கோவை, ஜூன். 27-
 
கியாஸ் விலை உயர்வை கண்டித்து கோவையில் நாளை ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இது குறித்து கோவை மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஆர்.ஆர். மோகன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-  
 
ஏழை, நடுத்தர மக்களின் வாழ்க்கை தரத்தை முற்றிலும் சீர் குலைக்க செய்யும் வகையில் மத்திய காங்கிரஸ் அரசு கியாஸ் சிலிண்டர் விலையை ரூ. 50 - ம், டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 3- ம், மண்எண்ணை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 2-ம் உயர்த்தி உள்ளது. இந்த தாங்க முடியாத விலைவாசி ஏற்றத்தால் விழி பிதுங்கி நிற்கும் அடி தட்டு, நடுத்தர மக்களின் தலையில் பாறாங்கல்லை தூக்கி போடுவது போல் இந்த விலை ஏற்றம் அமைந்துள்ளது.  
 
இந்த விலை ஏற்றத்துக்கு கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதோடு, உடனடியாக மத்திய அரசு விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ம.தி.மு.க. சார்பில் நாளை (செவ்வாய்க் கிழமை) காலை 10 மணிக்கு கோவை செஞ்சிலுவை சங்கம் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ம.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருந்திரளாக கலந்து கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறேன்.
 
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.