நம்பியூரில் பரபரப்பு: வட்டியில்லா கடன் வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி- தொண்டு நிறுவன தலைவர் முற்றுகை
Erode
சனிக்கிழமை,
ஜூன் 18,
4:21 PM IST
0
கருத்துக்கள்
நம்பியூர், ஜூன். 18-
கோபி அருகே உள்ள கரட்டடி பாளையத்தில் மக்கள் சுயமுன்னேற்ற கூட்டமைப்பு என்ற பெயா¤ல் சிவராஜ் என்பவர் ஒரு தொண்டு நிறுவனம் நடத்தி வந்தார்.
இவர் பல்வேறு ஊர்களில் மத்திய, மாநில அரசிடம் இருந்து வட்டியில்லா கடன் வாங்கி தருவதாக உறுப்பினர் சேர்க்கைக்கு ரூ.250 முதல் ரூ.1000 வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. மொத்தம் 2500 போ¤டம் பணம் வசூல் செய்தாக தொ¤கிறது. பணம் வசூல் செய்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் யாருக்கும் அவர் கடன் வாங்கி கொடுக்கவில்லை.
இந்த நிலையில் நம்பியூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் சம்பந்த பட்டவர்களை அழைத்து சிவராஜ் கூட்டம் போட்டு பேசினார். அப்போது பெண்கள் ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் கடன் வாங்கி தரவில்லை. எனவே நாங்கள் கட்டிய பணத்தை திருப்பி தர வேண்டும் என சிவராஜை முற்றுகையிட்டு தகராறு செய்தனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த நம்பியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் காந்திமதி, ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து வந்து பொது மக்களை சமாதனபடுத்தினர். பின்னர் சிவராஜை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
0
கருத்துக்கள்