Recommendations
Recent Activity
நியூசிலாந்தில் நிலநடுக்கம்
வெலிங்டன், ஜூன்.13-
 
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. முதல் நிலநடுக்கம் ரிக்டரில் 5.2 ஆக பதிவானது. இதில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி சிலர் காயம் அடைந்தனர்.
 
90 நிமிட இடைவெளியில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.0 ஆக பதிவானது. இந்த இரண்டு நிலநடுக்கங்களால் பல கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த நிலநடுக்கத்தின் காரணமாக எங்கும் புழுதி படலமாக காட்சி அளிக்கிறது. அங்கு மீட்பு பணி நடக்கிறது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.