Recommendations
Recent Activity
இருதய, நுரையீரல் சிகிச்சைக்காக அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் எங்கே? அமைச்சரின் கேள்வியால் பரபரப்பு

 
அமைச்சர் எஸ்.பி.வேலு மணி கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்து கொண்டிருக்கும் போது திடீர் என கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் இருதய நோயாளிகளின் வசதிக்காக ரூ. 30 லட்சம் செலவில் வழங்கப்பட்ட இருதய, நுரையீரல் துடிப்பு கண்டறியும் எந்திரம் மற்றும் அசிட், பேஸ், கியாஷ் அனலைசிங் (ஏபிஜே) மிஷின்கள் எங்கே? அது பயன்பாட்டில் உள்ளதா? அதனை உடனே பார்க்க வேண்டும் என்று ஆஸ்பத்திரி சூப்பிரண்டு மதிவாணனிடமும், ஆர்.எம்.ஓ. சிவப்பிரகாசத்திடமும் கேட்டார்.
 
டெக்னீஷியன்கள் மற்றும் வசதிகள் இல்லாததால் அவைகள் பயன்பாட்டில் இல்லை என்று அமைச்சரிடம் அதிகாரிகள் கூறினர். இதையடுத்து அமைச்சர் அந்த கருவிகளை பார்க்க வேண்டும் என்றார். அதன்படி கிடப்பில் கிடந்த அந்த நவீன கருவிகளை சென்று பார்வையிட்டார்.
 
உடனடியாக அதற்கான டெக்னீஷியன்களை நியமித்து நவீன கருவிகளை பயன்படுத்த உத்தரவிட்டார். இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சரிடம் பேசி ஆட்களை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மேலும் கலெக்டர் கருணாகரனிடம் இந்த நவீன கருவிகளை பயன்படுத்தாமல் இருப்பதற்கான காரணங்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.