புதுவை முதல் அமைச்சர் ரங்கசாமியுடன் கிருஷ்ணசாமி திடீர் சந்திப்பு: காங்கிரஸ் கூட்டணிக்கு முயற்சியா? || pondicherry krishnasamy meet with chief minister narayanasamy
Logo
சென்னை 27-11-2015 (வெள்ளிக்கிழமை)
புதுவை முதல்- அமைச்சர் ரங்கசாமியுடன் கிருஷ்ணசாமி திடீர் சந்திப்பு: காங்கிரஸ் கூட்டணிக்கு முயற்சியா?
புதுவை முதல்- அமைச்சர் ரங்கசாமியுடன் கிருஷ்ணசாமி திடீர் சந்திப்பு: காங்கிரஸ் கூட்டணிக்கு முயற்சியா?
புதுச்சேரி, ஜூன்.7-
 
புதுவை முதல்- அமைச்சர் ரங்கசாமியை தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி நேற்று மாலை சட்டசபை வளாகத்தில் உள்ள அவரது அறையில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடம் நடந்தது. அப்போது ரங்கசாமியும் கிருஷ்ணசாமியும் தனித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
 
இதன் பிறகு கிருஷ்ணசாமி ரங்கசாமியிடம் விடைபெற்று சென்றார்.   அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் கட்சி சந்தித்தது. தேர்தல் ஒப்பந்தபடி அமைச்சரவையில் இடம் அளிப்பதில் அ.தி.மு.க. - என்.ஆர். காங்கிரசிடையே மோதல் ஏற்பட்டது.
 
இதனால் தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க. -என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி இடையே முறிவு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க என்.ஆர். காங்கிரஸ் முயற்சி செய்வதாக செய்திகள் வெளியானது. இந்த சூழலில் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி- ரங்கசாமி சந்திப்பு முக்கியவத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
 
ஏற்கனவே ரங்கசாமி தனி கட்சி தொடங்க முடிவு செய்தபோது அவரை சமாதானப்படுத்த காங்கிரஸ் கட்சி மேலிட தூதராக கிருஷ்ணசாமியை அனுப்பியது. அப்போது கிருஷ்ணசாமி ரங்கசாமியை அவரது வீட்டில் சந்தித்து சமரசம் செய்ய முயன்றார். ஆனால், இந்த சமரச முயற்சி பலனளிக்கவில்லை.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - புதுச்சேரி

section1

புதுவை அரசு ஊழியர் டெங்கு காய்ச்சலில் பலி

புதுச்சேரி, நவ. 27–புதுவை லாஸ்பேட்டை நெருப்புக்குழி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் (வயது 37). புதுவை அரசின் ....»