மு.க. அழகிரியை பற்றி பேசியதால்
தி.மு.க.- அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் மோதல்- அடிதடி
பழனி நகரசபை கூட்டத்தில் பரபரப்பு
Dindigal
திங்கட்கிழமை,
மே 30,
5:52 PM IST
0
கருத்துக்கள்
பழனி மே, 30-
பழனி நகரசபை கூட்டம் அதன் தலைவர் ராஜ மாணிக்கம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) தலைமையில் நடைபெற்றது. இதில் தி.மு.க- அ.தி.மு.க. உள்பட அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 14-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சக்திவேல் பேசும் போது, “தி.மு.க. தலைவர் கருணாநிதி, மு.க. ஸ்டாலின் ஆகியோரை பற்றி பேசி விட்டு மத்திய மந்திரி மு.க.அழகிரியை குறிப்பிடும் போது அஞ்சா நெஞ்சர் அழகிரி என்று குறிப் பிட்டார்.
இதைக் கேட்டதும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மு.க.அழகிரியை தான் காணவில்லையே? அவரை அஞ்சா நெஞ்சர் என்று சொல்லக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தி.மு.க- அ.தி.மு.க. கவுன் சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக உருவெடுத்தது. இரு தரப்பினரும் ஒருவரை யொருவர் அடிக்க பாய்ந்தனர்.
அ.தி.மு.க. கவுன்சிலர் கணேசனும், தி.மு.க. கவுன் சிலரும் ஒருவரை யொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். மற்ற கவுன்சிலர்கள் அவர்களிடையே புகுந்து சமரசம் ஏற்படுத்தினர். அதே நேரத்தில் பெண் கவுன்சிலர்களும் மோதிக் கொண்டனர். இதனால் நகர சபை தலைவர் கூட்டத் தை பாதியிலே ஓத்தி
வைத்தார்.
0
கருத்துக்கள்