Recommendations
Recent Activity
விஜய், ஹஸ்சி, அஸ்வினுக்கு பாராட்டு: சிறப்பான தொடக்கத்தால் கோப்பையை வென்றோம்; -கேப்டன் டோனி
சென்னை, மே. 29-
 
ஐ.பி.எல். கோப்பையை டோனி 2-வது முறையாக சென்னை சூப்பர் கிங்சுக்கு பெற்றுக்கொடுத்தார். இறுதிப்போட்டியில் பெங்களூரை வீழ்த்தி ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி கூறியதாவது:-
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முரளி விஜய், மைக்ஹஸ்சியின் சிறப்பான தொடக்கமே காரணம். முக்கியத்தும் பெற்ற இறுதிப்போட்டியில் இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். 15 ஓவர் இருவரும் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடியதால் 205 ரன்னை குவிக்க முடிந்தது. இதற்காக இருவரையும் பாராட்டுகிறேன். இறுதிப் போட்டியில் வெற்றி பெற வேண்டுமானால் பேட்ஸ் மேன்கள் சாதிக்க வேண்டும் என்று விரும்பினேன். அதன் படி நடந்தது.
 
அஸ்வினின் பந்துவீச்சு மிகவும் அற்புதமாக இருந்தது. உன்மையில் அனைவரது இதயத்தை தொடும் வகையில் இருந்தது. கடந்த ஐ.பி.எல். போட்டியில் நாங்கள் அரை இறுதியில் கடுமையாக போராடியே நுழைந்தோம். இந்த முறை அப்படி இல்லை. தொடக்கத்தில் இருந்தே நன்றாக விளையாடி கோப்பையை வென்றோம்.
 
உலக கோப்பை போட்டி முடிந்த உடன் ஐ.பி.எல். போட்டி வந்துவிட்டது. உலக கோப்பை வெல்ல வேண்டும் என்பது இந்திய முழுக்க விருப்பமாக இருந்தது. அதை தொடர்ந்து நடந்த ஐ.பி.எல். போட்டி நீண்ட அட்டவணையை கொண்டு இருந்தது. ரசிகர்கள் மிகுந்த களைப்புடன் இருந்தாலும் ஐ.பி.எல். போட்டியை நாள் செல்ல செல்ல வெகுவாக ரசித்தார்கள்.
 
சென்னை ரசிகர்களின் உற்சாகத்தால் வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். சேப்பாக்கத்தில் சூப்பர் கிங்ஸ் அனைத்து ஆட்டத்திலும் வெற்றி பெறுவதற்கு ரசிகர்களின் ஆதரவே காரணம். நன்னடத்தைக்கான பேர் பிளை விருதை பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
 
இவ்வாறு டோனி கூறினார்.