மேலும் தலைப்புச்செய்திகள்
Recommendations
Recent Activity
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: சட்டபடி எதிர்கொள்வேன்- கனிமொழி
டெல்லி, ஏப். 5-   
 
 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ. ராஜா மற்றும் தொலைபேசி நிறுவனங்களின் மேலாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் இவ்வழக்கு நடைப்பெற்று வருகின்றது.    
 
இது தொடர்பாக கடந்த ஏப்ரல் 25-ந்தேதி சி.பி.ஐ. 2-வது குற்றப்பத்திரிகையே சி.பி.ஐ. கோர்டில் தாக்கல் செய்தது. அதில் கனிமொழி மற்றும் கலைஞர் டி.வி. நிறுவாக மேலாளர் சரத்குமார் உள்பட 5 பேர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.  
 
ஏற்கனவே 2-வது குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றிருந்த 2 தொலைபேசி நிறுவன அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  மேலுமுள்ள  கனிமொழி, சரத்குமார், சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் அதிகாரி கரிம்முரானி ஆகியோருக்கு சி.பி.ஐ. மே 6-ந் தேதி டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில்  ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியது.    
 
இந்நிலையில் தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்த கனிமொழி 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சட்டப்படி எதிர் கொண்டு இவ்வழக்கிலிருந்து வெளிவருவேன் என்றும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில்  முன் ஜாமினுக்கு தாக்கல் செய்ய  விரும்பவில்லை  எனவும் தெரிவித்தார்.