ஒரு கர்ப்பிணிப் பெண் கர்ப்பக்காலத்தில் 10 கிலோ எடை அதிகரிக்க வேண்டும். காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், பால், முட்டை போன்றவற்றை அந்த காலக்கட்டத்தில் வழக்கத்தைவிட சற்று அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
இது வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கும், சுகப்பிரசவத்திற்கும், தேவையான அளவு தாய்ப்பால் சுரப்பதற்கும் பெரிதும் உதவுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள் பால், முட்டை, பருப்பு வகைகள், கீரை வகைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றில் உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள், வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் நிறையவே உள்ளன.
இவற்றை கருவுற்ற பெண்கள் போதிய அளவில் கூடுதலாக எடுத்துக்கொண்டால் அவர்களது உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். அவர்கள் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆரோக்கியமாக பிரச்சினையின்றி வளரும்.
ஆனால், அதிக கொழுப்பு நிறைந்த நெய், வெண்ணெய், பாலாடை, ஐஸ்கிரீம், முந்திரி, பிஸ்தா, முட்டையின் மஞ்சள்கரு, தேங்காய், ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, வனஸ்பதி போன்றவற்றை அதிக அளவில் விரும்பி உட்கொள்ளக்கூடாது. அதேநேரம், இவற்றை மிகக்குறைந்த அளவில் அளவோடு எடுத்துக்கொள்வதில் தவறில்லை.