கோவை, ஏப். 27-
கோவை கொடிசியா தலைவர் கந்தசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து கோவையில் அனைத்து தொழில் அமைப்புகள் சார்பில் வருகிற 5-ந்தேதி வேலை நிறுத்தம் மற்றும் மாபெரும் கண்டன பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் கோவையில் உள்ள 38 தொழில் அமைப்புகளை சேர்ந்த லட்சக்கணக்கான ஊழியர்கள் கலந்து கொள்கிறார்கள்.
கோவை சிவானந்தா காலனியில் உள்ள பவர் ஹவுஸ் அருகில் இருந்து பேரணி தொடங்குகிறது. வி.வி.கே.மேனன் சாலை வழியாக வ.உ.சி. பூங்காவை வந்தடைகிறது. அங்கு மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் நடக்கிறது. மின் வாரியத்தை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும், அனைத்து தரப்பினருக்கும் சமமான மின்வெட்டை அரசு அமுல்படுத்த வேண்டும். தமிழக அரசு புதிய மின் உற்பத்தி திட்டத்தை உடனே அறிவித்து ஏற்கனவே இயங்கி வரும் மின் உற்பத்தி நிலையங்களில் பராமரிப்பு பணிகளை அதிகப்படுத்தி மின் உற்பத்தியை பெருக்க வேண்டும்.
மத்திய அரசு தமிழகத்தில் கல்பாக்கம், கூடங்குளம் நெய்வேலி ஆகியவற்றின் மின் உற்பத்தி யில் 75 சதவீதத்தை தர வேண்டும். தென் மாநிலங்களின் மின் கடத்தி களை பயன்படுத்தி வட மாநிலங்களில் தேவைக்கு அதிகமாக உள்ள மின்சாரத்தை நமக்கு பெற வேண்டும். ஜெனரேட்டர் உபயோகப்படுத்துபவர் களுக்கு அரசு மானியமாக ஒரு யூனிட்டுக்கு ரூ.10 வழங்க வேண்டும். தமிழக அரசு காற்றாலைக்கு கொடுக்க வேண்டிய பாக்கியை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
இந்த வேலை நிறுத்தத்தால் கோவையில் 200 கோடிக்கு இழப்பு ஏற்படும். பாரபட்சமாக மின் தடையை ஏற்படுத்தும் மின் வாரியத்துக்கு எதி ராக மின்நுகர்வோர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வாறு கொடிசியா தலைவர் கந்தசாமி கூறினார்.
பேட்டியின்போது காட்மா தலைவர் ரவிக்குமார், கோப்மா தலைவர் மணி ராஜ், டேக்ட் தலைவர் ஜேம்ஸ், சீமா தலைவர் ரங்கநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.