நஞ்சுபுரம்

 
விஷப்பாம்புகள் நடமாடும் ஊர் நஞ்சுபுரம். அங்குள்ள மக்கள் பாம்புகளை வழிபடுகிறார்கள். அதே ஊரில் வசிக்கும் மிராசுதார் மகன் ராகவ் பாம்புகளை பிடிப்பதும் கொல்வதுமாக திரிகிறார். சலவை தொழில் செய்யும் மோனிகாவுக்கும், ராகவ்வுக்கும் காதல் மலர்கிறது.
 
மோனிகாவை கொத்த வரும் பாம்பை ராகவ் அடிக்கிறார்,. அது காயத்துடன் தப்புகிறது. அந்த பாம்பு ராகவ்வை கொல்ல வெறியோடு அலைகிறது. இன்னொரு புறம் காதலை பிரிக்க ராகவ் தந்தை சதித்திட்டம் வகுக்கிறார். இவற்றில் இருந்து மீண்டாரா என்பது கிளைமாக்ஸ்.
 
பாம்பு கிராமத்தை தத்ரூபமாக படமாக்கி பயமும் பதட்டமுமாய் காட்சிகளை நகர்த்துகிறார் இயக்குனர் சார்லஸ்.. பாம்பு கொத்தி தொடர் சாவுகள் நிகழ்வதும் உயிருக்கு போராடும் ஒரு பெண்ணை காட்டு வழியாய் ராகவ் தூக்கி போய் வைத்தியரிடம் காட்டி விஷத்தை முறித்து காப்பாற்றுவதும் திகில்...
 
பாம்புவிடம் இருந்து தப்பிக்க பரண் கட்டி ராகவ் தங்குவதும் அந்த பாம்பு அவரை கொல்ல சுற்றி சுற்றி வருவதும் சீட் நுனிக்கு இழுக்கும் பயங்கரம். பாம்புகளை தைரியமாக எதிர் கொண்ட ராகவ் பயத்துக்கு மாறியதும் என்ன ஆவாரோ என்ற படப்பிடிப்பு எகிறுகிறது.
 
ராகவ், மோனிகா காதல் கவித்துவம். நடிப்பில் மோனிகாவிடம் முதிர்ச்சி. தனக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதை காதலனுக்கு தெரிவிக்க முடியாமல் தவிக்கும் சீன்களில் அழுத்தம் பதிக்கிறார்.
 
கிளைமாக்ஸ் அதிர்ச்சியில் அபாரமாக பொருந்துகிறார். உள்ளூர் வில்லன் தம்பி ராமையா, நரேன், பிரியா கேரக்டர்களும் கச்சிதம். நிறைய சாவுகள் நிகழ்ந்தும் விஷ பாம்புகளுடன் கிராமத்தினர் வாழ்வதில் யதார்த்தம் இல்லை.
 
ராகவ் இசை, ஆண்டனி ஒளிப்பதிவு கட்சிகளோடு ஒன்ற வைக்கிறது.
மதிப்பீடு செய்க