தொண்டையில் புண்:
பொதுமக்களிடம் கையை அசைத்து ஓட்டு கேட்ட விஜயகாந்த்
Villupuram
திங்கட்கிழமை,
ஏப்ரல் 11,
4:08 PM IST
0
கருத்துக்கள்
திருக்கோவிலூர், ஏப்.11-
ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் விஜயகாந்த் கடந்த 3 நாட்களாக தொகுதியில் தீவிர ஓட்டு வேட்டை நடத்தினார். இன்று 4-வது நாளாக காலையில் முகையூர் ஒன்றியத்தில் மேலநந்தல் மேட்டுச்சேரி, பள்ளிச்சந்தல், தேவரடியார் குப்பம், ஜம்பை, வடக்கு தாங்கல் ஆகிய ஊர்களில் வாக்கு சேகரித்தார்.
விஜயகாந்த் தொடர்ந்து பிரசாரம் செய்ததால் அவரது தொண்டையில் புண் ஏற்பட்டு இருப்பதால் அவர் பேசக்கூடாது என்று டாக்டர்கள் கூறியுள்ளார். எனவே விஜயகாந்த் இன்று கையை அசைத்து, கும்பிட்டு பொது மக்களிடம் வேனில் இருந்த படி வாக்கு கேட்டார். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இளைஞர்கள் சால்வை அணிவித்து வரவேற்றார்கள்.
இன்று மாலை ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த்தை ஆதரித்து டைரக்டர் சீமான் பேசுகிறார்.
0
கருத்துக்கள்