ஹீரோவான விஜயகாந்த் ஜீரோ ஆகி விட்டார்: அ.தி.மு.க. கூட்டணியில் தலைவர்களிடம் ஒற்றுமை இல்லை; அன்புமணி ராமதாஸ் பேச்சு || vijayakanth going to zero no union in admk alliance leaders anbumani ramadoss speak
Logo
சென்னை 27-02-2015 (வெள்ளிக்கிழமை)
தலைவாசல் >> தமிழ்நாடு தேர்தல் 2011 >> தொகுதிகள் >> தொகுதி செய்தி
ஹீரோவான விஜயகாந்த் ஜீரோ ஆகி விட்டார்: அ.தி.மு.க. கூட்டணியில் தலைவர்களிடம் ஒற்றுமை இல்லை; அன்புமணி ராமதாஸ் பேச்சு
ஹீரோவான விஜயகாந்த் ஜீரோ ஆகி விட்டார்: அ.தி.மு.க. கூட்டணியில்
தலைவர்களிடம் ஒற்றுமை இல்லை; 
அன்புமணி ராமதாஸ் பேச்சு
சங்ககிரி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை ஆதரித்து, பா.ம.க.முன்னாள் மத்தியமந்திரி அன்புமணி ராமதாஸ்,சங்ககிரி பழைய பஸ் நிலையம் அருகில் தேர்தல் பிரச்சாரம் செயதார். அப்போது அவர் பேசியதாவது:-
 
சங்ககிரி சட்டமன்ற தொகுதி ஜனநாயக முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தமிழக மக்கள் அனைவரும் புரிந்து தெரிந்தவர்.சேலம் மாவட்டத்தில் பல சாதனைகள் செய்து உள்ளார்.நீங்கள் அனைவரும் சேர்ந்து உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறசெய்ய வேண்டும்.
 
சங்ககிரி சட்டமன்ற தொகுதி பின்தங்கிய தொகுதி இந்த தொகுதியில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் போட்டியிடுகிறார். அவர் வெற்றி பெற்றால் சேலம் மாவட்டத்திலேயே சங்ககிரி தொகுதியை முதலாவது தொகுதியாக கொண்டு வருவார்.அவர் அடிப்படை வசதி மற்றும் அதிக வசதி செய்து கொடுப்பார்.
 
சங்ககிரி சட்டமன்ற தொகுதி மாதிரி சட்டமன்ற தொகுதியாக மாற்றி காட்டுவார். 6வது முறை முதல்வர் கருணாநிதி ஆட்சி அமைக்கிறார், அதில்யாருக்கும் சந்தேகம் வேண்டாம். வீரபாண்டி ஆறுமுகம் வெற்றி பெற்றால்தான் கருணாநிதி ஆட்சிக்கு வரமுடியும். கருணாநிதி திட்டங்கள் சாதனை தொடரும்.சாதனை புரிந்த ஆட்சி. அ..தி.மு.க.ஆட்சியில் ஒரு திட்டங்கள் சொல்லுங்கள் கேட்கிறோம்.அ.தி.மு. க.கூட்டணி கோடம்பாக்கம் கூட்டணி கொள்கை கோட்பாடு இல்லை, அ.தி. மு.க.கூட்டணி தலைவருக்குள் ஒற்றுமை இல்லை.விஜயகாந்த் ஹீரோ ஜிரோ ஆகி விட்டார்.
 
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தொகுதி செய்தி

தகவல் இல்லை

amarprakash160600.gif
amarprakash160600.gif