திருப்புவனம்,
மார்ச். 26-
மானாமதுரை தொகுதி யில் தமிழரசியை வெற்றி பெற செய்யுங்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறி னார்.
மு.க.ஸ்டாலின்
பிரசாரம்
தமிழக துணை முதல்- அமைச்சர் ஸ்டாலின் மானாதுரை தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து மானாமதுரை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் தமிழரசிக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தார்.
திருப்புவனத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியதாவது:-
2006-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் 100/100 சதவீதம் கலைஞர் நிறைவேற்றியுள்ளார். அந்த உறுதியோடு தான் மீண்டும் வாக்குகள் கேட்டு வந்துள்ளோம்.
6-வது முறையாக
இந்த கூட்டணி காங்கிரஸ் தி.மு.க., பா.ம.க. விடுதலை சிறுத்தைகள், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் மற்றும் பல கட்சிகள் அடங்கிய கூட்டணியாகும். 6-வது தடவையாக கலைஞர் முதல்வர் ஆதவற்கு உங்கள் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் தமிழரசிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றிபெற செய்ய வேண் டும்.
2011ம் ஆண்டுக்கு தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தலைவர் கலைஞர் விடுத் துள்ள அறிக்கையில் மிக்ஸி, கிரைண்டர், திருமண உதவி தொகை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ. 30 ஆயிரமாக உயர்த்தியும், தொழிற்கல்வி படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவச லேப்டாப்பும் மற்றும் 60 வயது உள்ளவர்களுக்கு தமிழகம் முழுவதும் சுற்றிவர இலவச பஸ் பாஸ், முதியோர் பென்சன் ரூ.500ல் இருந்து ரூ.750 ஆக உயர்த்தியும் உள்பட பல சலுகைகள் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
2006 தேர்தல் அறிக்கை கதாநாயகன் எனவும் 2011 தேர்தல் அறிக்கை கதாநாயகி எனவும் கலைஞர் தெரிவித்துள்ளார். ஆகவே நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் உங்கள் தொகுதி வேட்பாளர் அமைச்சர் தமிழரசிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
வரவேற்பு
வழியில் பூவந்தி, திருப்பு வனம், திருப்பாச்சேத்தி பகுதியில் பிரசாரம் செய் துள்ளார். பிரசார வேன் சென்ற இடத்தில் எல்லாம் ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சியினர் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.