ஈரோடு மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடந்தது. இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து நாமாக வெளி யேறவில்லை. நாம் கேட்ட தொகுதிகள் கொடுக்காமல் 6 தொகுதிகள், 7 தொகுதிகள், 8 தொகுதிகள், மீண்டும் 7 தொகுதிகள் என்று நம்மை கூட்டணியை விட்டு வெளியேற்ற செய்ய அவர் கள் திட்டமிட்டார்கள். நம் பிடரியை பிடித்து தள்ளுவது போல தள்ளி விட்டார்கள். அ.தி. மு.க. தலைமையின் நட வடிக்கை அ.தி.மு.க. தொண்டர் களையே வேதனைபட செய்திருக்கிறது.
கடந்த 5 ஆண்டுகளாக அ.தி.மு.க. பெரும்பான்மை இடத்தை பிடித்து ஆட் சியை பிடிக்கும் என்று கூறி வந்தேன். ஆனால் எந்த இடத்திலும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா முதல்-அமைச்சர் ஆவார் என்று கூற வில்லை. ம.தி.மு.க. உண்மையான ஜனநாயக கட்சி. இதன் நடவடிக்கைள் திறந்த புத்தகம். கலைஞர் என்னை மலை உச்சியில் இருந்து தூக்கி வீசியபோது என்னை மடிகளில் தாங்கி வைத்து பொதுச்செயலாளர் என்ற பதவியை கொடுத் தவர்கள் நீங்கள் (தொண் டர்கள்). உங்கள் உணர்வு களுக்கு எப்போதும் மதிப் பளிப்பேன்.
இந்த முடிவின் மூலம் கட்சியின் உணர்வு மட்டுமின்றி மக்களின் நல்லெண்ணத்தையும் பெற்று இருக்கிறோம். அ.தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியேற்றியது தமிழக மக்கள் நம்மைபற்றி அலசிபார்க்க, ஆராய்ந்து பார்க்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து உள் ளது. இந்த காலகட்டத்தில் படித்தவர்களையும், நம் மீது நல்லெண்ணம் கொண் டவர்களையும் கட்சியில் இணைப்போம்.
அண்ணா கண்ட கனவை நிறைவேற்ற, தமிழர்களின் உரிமையை காக்க, தமிழ் ஈழ மக்களின் உரிமையை மீட்க தொடர்ந்து பாடுபடுவோம். 2012 மாற்றத்திற்கான விïகங்களை வகுத்து இருக்கிறேன். விïகங்களை வெளியில் கூறாமல் விவேகமாக நடந்து வெற்றி பெறுவோம். இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் தேர்தலை புறக்கணிக்கவில்லை. இந்த தேர்தலில் நாம் போட்டியிட வில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க. தலைமையையோ, அ.தி.மு.க. தலைமையையோ விமர்ச்சிப்பது நமது நோக் கம் அல்ல. உங்களுக்கு தெரியும்.
நாம் என்ன செய்ய வேண்டும் என்பது. அதன்படி ஜனநாயக கடமை யாற்றுவோம். இவ்வாறு வைகோ கூறினார். கூட்டத்தில் ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை ஈரோடு மாவட்ட செயலாளர் கணேசமூர்த்தி எம்.பி செய்திருந்தார்.