Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
அரசியல் தூண்டுதல் சோதனை மதுரை ஆதீனம் மரபு நித்யானந்தா, ஆரணி, ஆரணி கோவில்கல் கொள்ளை முயற்சி, ஆரணி வாலிபர் குத்திக் கொலை நண்பர் ஆத்திரம், ஆரணி கல்லூரி மாணவி மாயம், ஆரணி கோவில் தேரோட்டம் நிறுத்தம் போலீஸ், ஆரணி பஸ் கடைகள் பொது ஏலம் ஐகோர்ட்டு தடை, ஆரணி விபத்து வேன் மாட்டு வண்டி மோதல், இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகர் கைது, எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் முறைகோடு பள்ளி முறைகேடு அங்கீகாரம் ரத்தாகும் இயக்குனர் அறிவிப்பு, எஸ்.எஸ்.ஏ. திட்டம் ஆசிரியர்கள் சம்பளம், கண்ணமங்கலம் சூறை காற்று மின் கசிவு குடிசை வீடு, கண்ணமங்கலம் விபத்து அரசு சொகுசு பஸ் மினி வேன் மோதல் டிரைவர் நசுங்கி சாவு, கல்லூரி மாணவி நகை பறிப்பு கொள்ளையன் தப்பி ஓட்டம், திருவண்ணாமலை
ஆக்கிரமிப்பு அகற்ற கோரி பஸ்கள் சிறைபிடிப்பு
செய்யாறு, மார்ச்.11- 
 
 
செய்யாறு தாலுகா செங்காடு கிராமத்தில் உள்ள மேச்சல் புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து செங்கல் சூளை போட்டு விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.  
 
இதனால் ஆக்கிரமிப்பு அகற்றிட வலியுறுத்தி செங்காடு பொதுமக்கள் மாசிலா மணி என்பவரின் தலைமையில் 50க்கு மேற்பட்ட பொதுமக்கள் செய்யாறு - தேசூர் சாலையில் சாலையின் குறுக்கே பெரிய, பெரிய கற்களை வைத்து அந்த வழி யாக வந்த பஸ்களை சிறை பிடித்தனர். 
 
தகவல் அறிந்தவுடன் செய் யாறு தாசில்தார் ஏ.லலிதா, அனக்காவூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நாகராஜன் (பொறுப்பு) சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களை முறையாக மனு அளிக்க வேண்டும்.
 
தேர்தலில் நேரத்தில் போக்குவரத்து இடையூறாக செயல்பட கூடாது என்றும், பொது மக்களுக்கு இடையூறாக சாலையை வழி மறித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். அதனை தொடர்ந்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.
 
இச்சம்பவத்தால் சுமார் அரை மணி நேரம் பிறகு பஸ்கள் சென்றனர். ஆக்கிரமிப்பு செய்யபட்டதாக கூறிய இடத்திற்கு நேரடியாக சென்று அங்கு செங்கல் சூளையில் ஈடுப்பட்டு இருந்த தொழிலாளர்களிடம் தாசில்தார் ஏ.லலிதா விசாரணை செய்தார்.