Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
No Data Available..
கூந்தல் அழகிற்கு

 
முடி உதிர்வது,முடியின் நுனிப்பகுதி வெடிப்பது, உடைவது என்பது இன்று பெண்கள் சாதாரணமாக எதிர்நோக்கும் பிரச்சினையாகும். இவர்கள் மாறி மாறி எதையாவது செய்வார்கள் ஆனால் எதிலும் சரியான தீர்வு கிடைக்காமல் திணறி விடுவார்கள்.
 
முடியை கவனித்து, பராமரிக்காவிட்டால், முடி உடையும் வாய்ப்புகள் அதிகம். அதேபோல் முடியின் நுனிப்பகுதியும் பிளவுபடும். அதிகமாக வெயிலிலும், காற்றிலும் வேலை செய்பவர்களின் தலை முடி நடுவில் உடைந்தும் நுனியில் பிளவு பட்டிருப்பதும் சகஜமான விஷயம்.
 
கிணற்று தண்ணீரில் குளிப்பவர்களின் தலைமுடி அதிகமாக உடைந்து போக வாய்ப்பிருக்கிறது. மேலும், வயதான முடியும் அடிக்கடி உடைந்து போகும். கெமிக்கல் கலந்த ஷாம்போவை உபயோகித்து தலைக்கு குளிக்க வேண்டாம். சோப்பு போன்றவற்றையும் தலைமுடிக்கு உபயோகிப்பது நல்லதல்ல.
 
முடியின் நடுவில் உடைந்த முடியை மாதா மாதம் கட் செய்து டிரிம் பண்ணினால் சீக்கிரத்திலேயே சரியாகிவிடும். அதேபோல் அவரவர்களின் முடிக்கு தகுந்த கன்டிஷனர் உபயோகிப்பது நல்லது