சென்னை, பிப். 25-
தமிழ்நாடு தையல் கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் 14-வது மாநில மாநாடு வருகிற 27-ந்தேதி வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் நடைபெறுகிறது.
சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்குகிறார். துணை தலைவர்கள் தேவரா ஜன், சாமுவேல், புருஷோத் தமன், துணை செயலாளர் வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். மாநில பொதுச்செயலாளர் டி.வி.எஸ். மணி மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.மத்திய மந்திரி ஜெகத்ரட் சகன், அமைச்சர் தா.மோ. அன்பரசன், எஸ்.வி. சேகர் எம்.எல்.ஏ. ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் சேம. நாராயணன், மருத்துவ நல சங்க தலைவர் பாக்கியநாதன், வீடு, மனை, தரகர்கள் நல சங்க தலைவர் வி.என். கண்ணன் தையல் கலை தொழிலாளர் சங்கத் தின் துணை பொதுச் செயலாளர்கள் முருகையன், ஜெயபால் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
தையல் தொழில் தொடர்பான கண்காட்சியும் நடைபெறுகிறது. இது தொடர்பாக சங்க பொதுச் செயலாளர் டி.வி. எஸ். மணி கூறும்போது, “ஆண்டுக்கு 65 ஆயிரம் கோடி அளவுக்கு அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் தொழிலான தையல் தொழிலை மத்திய அரசு ஊக்குவிக்க வேண்டும்.
இதற்காக சென்னை, மும்பை, பூனா ஆகிய இடங் களில் உடனடியாக தையல் கலை தொடர்பான கல்லூரி களை தொடங்க வேண்டும்” என்றார்.