அழகு சிகிச்சை
Chennai
செவ்வாய்க்கிழமை,
பெப்ரவரி 22,
1:53 PM IST
0
கருத்துக்கள்
*ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர் சேர்த்து, முகத்தில் தடவி, ஒரு மணிநேரம் கழித்து, சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும். இதை தினசரி செய்து வர, வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறமுள்ள புள்ளி மறையும்.
*பெண்களின் அழகான கன்னங்களுக்கு அவ்வப்போது அச்சுறுத்தலாகத் தோன்றுவது முகப்பருக்கள். பருக்கள் வராமல் இருக்க வேண்டும் என்றால் மலச்சிக்கல் வராத அளவுக்கு வயிற்றைப் பராமரிக்க வேண்டும். பொடுகுத் தொல்லை, ஹார்மோன் பிரச்சினை, நகத்தினை வளர்த்தல், முறையற்ற உணவுப் பழக்கம், உணவில் அதிக அளவு எண்ணெய் பயன்படுத்துதல் போன்றவை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
*பெரும்பாலான அழகு சாதனப் பொருட்களில் ரசாயனப் பொருட்களை கலந்திருப்பார்கள். அது உங்களுடைய சருமத்தில் இருக்கும் எண்ணெய்த் தன்மையை பாதிக்கும் என்பதால் சருமநிபுணரின் ஆலோசனையை கேட்டு பயன்படுத்தவும்.
0
கருத்துக்கள்