நந்தி
ரைஸ்மில்லில் வேலை செய்பவர் அகில். இவர் பசு மாடு ஒன்றை பாசமாக வளர்க்கிறார். அந்த மாட்டை தந்தை பக்கத்து ஊர் பஞ்சாயத்து தலைவரிடம் விற்று விடுகிறார். பசுவை பிரிய மனமின்றி மீட்க முயற்சிக்கிறார்.அப்போது அவருக்கும் பஞ்சாயத்து தலைவர் மகள் சனுஷாவுக்கும் காதல் மலர்கிறது.
 
ரவுடித்தனம் செய்யும் நிதிஷ் காதலுக்கு தடையாய் நிற்கிறார். எதிர்ப்பை மீறி காதலர்கள் சேர்ந்தார்களா? என்பது கிளைமாக்ஸ்...
 
கிராமிய மணத்தோடு உயிர்ப்பான காதலை காட்சி படுத்தி உள்ளார் இயக்குனர் தமிழ்வாணன். அகிலிடம் துறு துறுப்பு. தந்தை மீதான பாசத்திலும் அவரை அடித்தவர்களை ஊர் புகுந்து தாக்கி நொறுக்கும் வேகத்திலும் பளிச்சிடுகிறார்.
 
சனுஷா அழகான காதலி. உள்ளூர் சண்டியராக அடிதடி செய்கிறார் நிதிஷ்... காமெடியில் கலகலப்பூட்டுகிறார் சிங்கம்புலி. கல்யாண செலவுக்கு பணம் கேட்கும் நண்பனிடம் என் பொண்டாட்டி கழுத்தில் இருபது பவுன் சும்மாதான் தொங்கிட்டு இருக்கு. வாங்கிக்கோ என்பது ரகளை.
 
பரத்வாஜ் இசையில் பாடல்கள் மண்வாசனை. ரத்தீஷ் ஒளிப்பதிவில் கிராமிய அழகு. கிளைமாக்சை மாற்றி யோசித்து இருக்கலாம்.
மதிப்பீடு செய்க