Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
No Data Available..
மலட்டுத்தன்மைக்கு காரணம்

 
குழந்தையின்மைக்கான மருத்துவ சிகிச்சை இப்போ மிகப்பெரிய பிசினஸ் ஆனதற்கு மிக முக்கிய காரணம் மலட்டுத்தன்மையும் மிக சாதாரணமான விஷயமாக மாறினது தான். சாப்பிடற சாப்பாடு, வசிக்கிற இடம், சிந்தனை என்று  எல்லாமே சுத்தமா இருந்த அந்தக் காலத்துல மலட்டுத்தன்மை என்பது  அபூர்வமான ஒன்றாக  இருந்தது.
 
ஆனால் இன்று சுவாசிக்கிற காற்று, குடிக்கிற தண்ணீர், பழக்கவழக்கங்கள், சுற்றுப்புறம், மனசு.... எல்லாவற்றிலும்  மாசு கலந்துள்ளது. நோய்கள் பெருகப் பெருக, மலட்டுத்தன்மை பிரச்சினையும் அதில்   முக்கியமான ஒன்றாகியது.. சுத்தமான சூழலில் இருப்பது, நல்ல சிந்தனை, ஆரோக்கியமான உணவு முறைகள், நல்ல பழக்கவழக்கங்கள் சில விஷயங்கள் மூலமா, இந்தப் பிரச்சினைகளில் இருந்து  ஓரளவு தப்பிக்கலாம்.
 
சாப்பாட்டுக்கும் மலட்டுத் தன்மைக்கும் என்ன சம்பந்தம் என்று பலருக்கு சந்தேகம் வரலாம்.  ஆனால் பலருக்கு தெரியாத விஷயங்கள் நிறைய இருக்கு!. இதய நோய், நீரிழிவு, மெனோபாஸ், ஹார்மோன் கோளாறு  உள்ளவர்களுக்கு எல்லாம் தாம்பத்ய உறவுல சிக்கல் இருக்கிறதோட, மலட்டுத்தன்மை பாதிக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.
 
ஆனால் சின்ன வயசுலேர்ந்தே சரிவிகித சாப்பாடு சாப்பிடறவங்களுக்கும்,நல்ல பழக்கவழக்கங்கள் உள்ளவர்களுக்கும் பிற்காலத்துல மலட்டுத்தன்மையால பாதிக்கப்படற அபாயம்  மிகவும் கம்மி. அதாவது வைட்டமின் சி-யும், ஃபோலிக் அமிலமும் அதிகமா உள்ள பழங்கள், காய்கறிகளைச் சேர்த்துக்கிறவங்களுக்கு மலட்டுத்தன்மை பாதிப்புகள் வருவது மிகவும் குறைவு..  
 
மலட்டுத்தன்மைக்கான காரணங்களில் முதலிடம் வகிப்பது, கொழுப்பு நிறைந்த உணவுகள். சின்ன வயதிலேயே  கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வது, உடற்பயிற்சி செய்யாதது, மந்தமான வாழ்க்கை முறை,தவறான சாப்பாடு (உதாரணத்துக்கு கார்போஹைட்ரேட் அதிகமுள்ள சாப்பாடு)இவை  அனைத்தும் செக்ஸ் உணர்வுகளைக் குறைச்சு, மலட்டுத்தன்மையில் கொண்டு போய் விட்டு விடும்.