10 வது உலக கோப்பை கிரிக்கெட் || 10th icc world cup
Logo
சென்னை 08-02-2016 (திங்கட்கிழமை)
10- வது உலக கோப்பை கிரிக்கெட்
10- வது உலக கோப்பை கிரிக்கெட்
உலககோப்பை கிரிக்கெட் போட்டி 1975- ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இங்கிலாந்தில் நடந்த முதல் உலக கோப்பையில் வெஸ்ட்இண்டீஸ் சாம்பியன் பட்டம் பெற்றது. அதை தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது.
 
கடைசியாக 2007- ம் ஆண்டு உலககோப்பை போட்டி வெஸ்ட் இண்டீசில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. இதுவரை 9 உலக கோப்பை போட்டி நடந்துள்ளது.
 
 இதில் ஆஸ்திரேலியா 4 முறையும், வெஸ்ட் இண்டீஸ் 2 தடவையும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் தலா 1 முறையும் உலக கோப்பையை வென்றுள்ளன.
 
தற்போது 10- வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகிறது. இந்தப்போட்டி வருகிற 19- ந்தேதி முதல் ஏப்ரல் 2- ந்தேதி வரை நடக்கிறது. 43 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 14நாடுகள் பங்கேற்கின்றன.
 
அவை 2 பிரிவாக பிரிக்கப் பட்டுள் ளன. “ஏ” பிரிவில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, கென்யா, கனடா ஆகிய அணிகளும். “பி” பிரிவில் இந்தியா, தென்ஆப் பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், அயர் லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்று உள்ளன.
 
ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் இரண்டு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதியில் நுழையும். “ லீக்” ஆட்டம் மார்ச் 20- ந்தேதி முடிகிறது.
 
கால்இறுதி ஆட்டம் மார்ச் 23- ந்தேதி தொடங்குகிறது. அரைஇறுதி ஆட்டங்கள் 29 மற்றும் 30-ந்தேதிகளிலும், இறுதிப்போட்டி ஏப்ரல் 2-ந்தேதியும் நடக்கிறது. சொந்த மண்ணில் நடைபெறுவதால் இந்தியா 2- வது முறையாக உலககோப்பையை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
 
ஆஸ்திரேலியா தொடர்ந்து 4- வது முறையாக கோப்பை கைப்பற்றி விட வேண்டும் என்ற வேட்கையில் உள்ளது. வெஸ்ட்இண்டீஸ் 3- வது முறையாகவும், இலங்கை,பாகிஸ்தான் 2- வது முறையாகவும் கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளன. தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி விட வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கின்றன.
 
முன்னணி 8 அணியும் கால் இறுதியில் நுழைந்து விடும் . அதே நேரத்தில் வங்காளதேசம், ஜிம்பாப்வே, அயர்லாந்து, கென்யா போன்ற நாடுகள் முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையிலும் ஆடலாம்.
 
ஏற்கனவே கோப்பையை வென்ற அணி தான் மீண்டும் கோப்பையை வெல்லுமா? சாம்பியன் பட்டம் பெறாத அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றுமா? என்ற ஆவல் ரசிகர்களிடம் உள்ளது.
 
ஒவ்வொரு அணியும் உலக கோப்பையை வெல்ல கடுமையாக போராடும். இதனால் ரசிகர்க ளுக்கு இந்த கிரிக்கெட் திருவிழா நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

லோதா கமிட்டி சிபாரிசு விவகாரம்: சிறப்பு பொதுக்குழுவை கூட்ட இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு

இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக அமைப்பில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து, நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif