மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை.
கூந்தல் உதிர்வதை தடுக்க
பதிவு செய்த நாள் :
புதன்கிழமை,
பெப்ரவரி 09,
9:10 AM IST
0
கருத்துக்கள்
சராசரியாக ஒவ்வொருவரின் தலையிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முடிகள் காணப்படும். முடி உதிர்வது என்பது பெண்கள், ஆண்கள் என இருபாலருக்கும் உள்ள பொதுவான பிரச்னை ஆகும். இந்த முடி உதிரும் பிரச்னை ஏற்படும் போது, நாம் அனைவருமே மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்வதில் தான் அதிக அக்கறை காட்டுகிறோம்.
இயற்கையில் கிடைக்கும் சில பொருட்களைக் கொண்டும் கூந்தல் உதிர்வதைத் தடுக்க முடியும். இதோ சில வழிகள்
எள்ளுச்செடி:
எள்ளுச் செடியின் இலைகள் சிலவற்றை தண்ணீரில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் ஆற வைக்கவும். இந்த தண்ணீரை தலையில் மசாஜ் செய்வதற்கும், தலையில் தேய்த்து குளிப்பதற்கும் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதால் கூந்தல் உதிர்வு மற்றும் கூந்தலில் விரைவிலேயே நரை ஏற்படுவது போன்றவை தடுக்கப்படும்.
பூண்டு:
கூந்தல் உதிர்தல் பிரச்னைக்கு பூண்டு மிக சிறந்த மருந்தாக பயன்படுகிறது. பூண்டு ஆயில் மற்றும் பூண்டு சாறு ஆகியவற்றால் தலையில் நன்கு மசாஜ் செய்து வந்தால் கூந்தலின் அடர்த்தி அதிகரிக்கும். தினமும் உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வதும் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.
மேலும் கூந்தல் பராமரிப்பு
0
கருத்துக்கள்