மளமளவென குறைந்து வருகிறது;
மேட்டூர் அணை நீர்மட்டம் 109 அடியானது
Salem
செவ்வாய்க்கிழமை,
பெப்ரவரி 08,
5:00 PM IST
0
கருத்துக்கள்
மேட்டூர், பிப். 8-
தமிழகத்தில் மேட்டூர் அணை மூலம் 11 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதிக்கு டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் மேட்டூர் அணை ஜனவரி 28-ந் தேதி நிறுத்தப்படும். இதே போல் இந்த ஆண்டும் குறிப்பிட்ட நாளில் தண்ணீர் நிறுத்தப்பட்டது.
மேலும் தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் அணைக்கு வரும் தண்ணீரும் குறைந்து விட்டது. கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டின் இறுதியில் தான் மேட்டூர் அணை நிரம்பியது. ஆனால் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் படிபடியாக குறைந்து கொண்டே வந்தது. தற்போது தண்ணீர் நிறுத்தப்பட்டாலும் தொடர்ந்து குடிநீர் தேவைக்கு பயன்படுத்துவதால் மளமள வென குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 109.75 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1263 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 100-அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கி இருப்பதால் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப் பாடு ஏற்படாது.
0
கருத்துக்கள்