பெண்களின் முக அமைப்பில் பல விதங்கள் உண்டு. உங்கள் முகம் முட்டை வடிவமான `ஓவல் ஷேப்'பாக உள்ளது. கூந்தலை குட்டையாக வெட்டினால் உங்களுக்கு அழகான, அமைப்பான முக அழகு கிடைக்காது. ஓரளவு நீளமாக, அலையடிப்பது போன்ற ஸ்டெப்களுடன்கூடிய`வால்யூம் லேயர்ஸ்' கட்டிங் செய்யவேண்டும்.
இந்த வகை ஹேர் கட் உங்கள் முகத்தின் இருபுறமும் கத்தையாக விழுந்து, ஒடுங்கிய முகத்தை அகலமாக, அழகாக தோன்றச் செய்யும். இந்த கூந்தல் அலங்கார முறை அமெரிக்கா போன்ற நாடுகளில் பெரும்பாலான பெண்கள் விரும்புவதாகும். சென்னையிலும் சாப்ட்வேர் துறையில் பணிபுரியும் இளம்பெண்கள் இந்த `ஹேர் கட்' மாடலை விரும்புகிறார்கள்.
பொதுவாக உங்களை போட்டோ எடுக்கும்போது குளோசப்பில் எடுக்காமல், சற்று லாங் ஷாட்டில் எடுங்கள். வால்யூம் லேயர்ஸ் கட்டிங்கை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை செய்துகொள்ளுங்கள். வேலைக்கு செல்லும் நேரங்களில் நீங்கள் கூந்தலைச் சீவி அப்படியே `ப்ரீயாக' விட்டுவிடலாம்.
நீங்கள் நடக்கும்போது அது முன்னும்- பின்னும் அலையடித்ததுபோல் அழகாக இருக்கும். கொண்டை ஏதாவது போட்டுக்கொள்ள விரும்பினால் மேலே தூக்கி, மொத்த முடியையும் வாரி கொண்டையாகப் போடக்கூடாது.
முன்பகுதி கூந்தலை அப்படியே முகத்தின் இருபுறமும் விட்டு, பின்பகுதி கூந்தலை மட்டும் வாரி எடுத்து, அதிகம் மேலே தூக்காமல் கொண்டைபோல் ஆக்கி `கிளிப்' போட்டுக்கொள்ளலாம். கொண்டை போட்டிருந்தால் இரவில் தூங்கும்போது அதை அவிழ்த்துவிட வேண்டும். கலரிங் செய்ய நீங்கள் விரும்பினால் பர்கண்டி கலர் பொருத்தமாக இருக்கும்.
வால்யூம் லேயர்ஸ் முறையில் கூந்தல் அலங்காரம் செய்தால் முகத்தை கூந்தல் இருபுறமும் மறைக்கும். முடியும் அதிகம் இருப்பதுபோல் தோன்றும். அதனால் நீங்கள் முகத்திற்கு அதிக சிரத்தை எடுத்து `மேக்கப்' போடவேண்டியதில்லை. கண்களுக்குரிய அலங்காரம் மற்றும் லிப்ஸ்டிக் மட்டும் போட்டால் போதும்.
வால்யூம் லேயர்ஸ் கட் செய்த பின்பு மூக்குத்தியும் போட்டால் அழகு அதிகரிக்கவே செய்யும். நீங்கள் தினமும் தலைக்கு குளிப்பதாக கூறுகிறீர்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் அல்லது ஒரு நாள்விட்டு ஒரு நாள் தலைக்கு குளியுங்கள்.
மற்ற நாட்களில் `ஷைனிங் லிக்யூட்'டாக செயல்படும் சீரம் உள்ளது. உங்கள் முடியின்தன்மையை ஆய்வு செய்து, அதற்குரிய சீரத்தை எக்ஸ்பெர்ட் மூலம் தேர்வு செய்து பயன்படுத்துங்கள். கலரிங் செய்திருந்தால் அதற்கு தக்கபடியான சீரம் தேர்வு செய்யவேண்டும். சீரம் உங்கள் கூந்தலை ஜொலிப்பாக வைத்துக்கொள்ளும்.
சிக்கும் ஏற்படாது. கூந்தலின் தன்மைக்கு ஏற்ற ஷாம்புவை தேர்வு செய்து அதையே நீங்கள் குளிக்கும்போது பயன்படுத்த வேண்டும். பெண்கள் இப்போது ஒன்று அல்லது இரண்டு வருடத்திற்கு ஒருமுறை தங்கள் கூந்தல் அலங்காரத்தை மாற்றுகிறார்கள்.
முதலில் நீங்கள் வால்யூம் லேயர்ஸ் போட்டுவிட்டு பின்பு அதில் லேசான மாற்றங்களோடு புதிய புதிய ஹேர் ஸ்டைலை பின்பற்றலாம். தற்போது ஓவல் முக அமைப்பு கொண்டவர்களுக்காக 25 க்கும் மேற்பட்ட ஹேர் ஸ்டைல் முறைகளை சர்வதேச அளவில் பின்பற்றுகிறோம்.