இலங்கையில், மீண்டும் வெள்ளம்; 13 பேர் பலி;
10 லட்சம் மக்கள் தவிப்பு
Colombo
ஞாயிற்றுக்கிழமை,
பெப்ரவரி 06,
12:56 PM IST
0
கருத்துக்கள்
கொழும்பு, பிப். 6-
இலங்கையின் கிழக்கு பகுதி மலை பிரதேசங்கள் நிறைந்தது. கடந்த ஜனவரி மாதம் அங்கு பலத்த மழை பெய்தது. இதில் 43 பேர் பலியாகினர். மேலும் பலத்த சேதமும் ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தற்போது, அங்கு நிலைமை ஓரளவு சீரடைந்து வருகிறது.
இந்த நிலையில் இலங்கையின் கிழக்கு, வடக்கு மற்றும் மத்திய வடக்கு பகுதிகளில் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ரோடுகளில் பெருக்கெடுத் தோடும் வெள்ளம் வயல்களில் பாய்ந்தோடுகிறது.
இதனால் பயிர்கள் சேதமடைந்துள்ளன. தற்போது பெய்து வரும் மழைக்கு இதுவரை 13 பேர் பலியாகி உள்ளனர். மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. எனவே, வெள்ளம் பாதித்த பகுதிகளில் வாழும் சுமார் 10 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். அவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
0
கருத்துக்கள்