Recommendations
Recent Activity
அ.தி.மு.க தெருமுனைப் பிரசாரம்
பாடாலூர், பிப். 5-
 
ஆலத்தூர் ஒன்றியம் அ.தி.மு.க சார்பில் குரும்பாபாளையம், கொட்டரை, புஜங்கராயநல்லூர், ஜமீன்பேரையூர், கூத்தூர் ஆகிய கிராமங்களில் விலைவாசி உயர்வை கண்டித்து தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது.
 
கூட்டத்திற்கு குரும்பாபாளையம் ஊராட்சி செயலாளர் பெரியசாமி, கொட்டரை ஊராட்சி செயலாளர் அழகப்பன், புஜங்கராயநல்லூர் ஊராட்சி செயலாளர் அண்ணாதுரை, ஜமீன் பேரையூர் ஊராட்சி செயலாளர் சின்னப்பா, கூத்தூர் ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். கிளை செயலாளர்கள் செல்லபிள்ளை, செல்வராஜ், விஜயராஜ், கரிகாலன், கலியபெருமாள், ராஜ், ராஜா, சின்னசாமி, பொன்னுசாமி, சிவசாமி, முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டங்களில் முன்னாள் சட்டமன்ற துணைத் தலைவர் வரகூர் அ.அருணாசலம் விலைவாசி உயர்வைக் கண்டித்து பேசினார்.
 
தலைமை பேச்சாளர் முருகேசன், ஒன்றியச் செயலாளர் கர்ணன், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் நாகராஜன், ஒன்றியப் பேரவை செயலாளர் சண்முகம், ஒன்றிய இணைச் செயலாளர் கொளக்காநத்தம் இளங்கோவன், மேலமாத்தூர் தங்கவேல், கீழமாத்தூர் ராஜேந்திரன், தொண்டப்பாடி செல்வராஜ், குடிக்காடி செந்தில், கொளத்தூர் சுப்பிரமணியன், மாவட¢ட பிரதிநிதி ராமலிங்கம், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் மாணிக்கம், ஒன்றிய பேரவை இணைச் செயலாளர் ராவேந்திரன், செல்வராஜ், ஒன்றிய துணைச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட அ.தி.மு.க வினர் கலந்துக் கொண்டனர்.