Recommendations
Recent Activity
பெரம்பலூர் மாவட்டத்தில் கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு பணி 10-ந்தேதி தொடங்குகிறது
பெரம்பலூர், பிப்.5-
 
பெரம்பலூர் மாவட்ட பேரூராட்சிகளில் கலைஞர் வீடுவழங்கும் திட்ட கணக்கெடுப்பு பணிகள் வருகிற 10-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.
 
இதுகுறித்து பெரம்பலூர் கலெக்டர் மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள ஓர் செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:- 
 
பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து பேரூராட்சிகளிலும், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2011 முதல் 2016 வரை உள்ள 5 ஆண்டு காலங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி பேரூராட்சி பகுதிகளில் அமைந்துள்ள குடிசை வீடுகளின் சுவர்கள் எத்தகையதாக இருப்பினும், அனைத்து ஓலை கூரைகளாக உள்ள குடிசை வீடுகளை 2011 முதல் 2016 வரையில் நிலையான கான்கிரீட் வீடுகளாக மாற்றி அமைக்கப்படும்.
 
கணக்கெடுப்பு பேரூராட்சி பகுதிகளில் உள்ள குடிசைவீடுகளை கணக்கெடுக்கும் பணி நடந்துவருகிறது. பேரூராட்சி செயல் அலுவலர், மற்றும் பணியாளர்கள் வாயிலாக குடிசை வீடுகளை வருகிற 10-ஆம் தேதிக்குள் கணக்கெடுப்பதுடன், குடிசையின் உரிமையாளர், வசிப்பவர்கள் பின்னணியில் குடிசை உள்ளவாறு குடிசையையும் சேர்த்து புகைப்படம் எடுக்கப்பட உள்ளனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டிருந்தது.