Recommendations
Recent Activity
மண்ணடியில் பெண்ணிடம் ரூ. 1 லட்சம் வைர நகைகள் அபேஸ்
ராயபுரம், பிப். 3-
 
மண்ணடி வரதப்பன் தெருவைச் சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மனைவி மஞ்சுளா (54). சம்பவத்தன்று இவர் அதே பகுதியில் உள்ள மார்க்கெட்டுக்கு தனது தங்கை மற்றும் தோழிகளுடன் சென்றார். கைப்பையும் வைத்திருந்தார். அதில் 2 வைர மூக்குத்தி, 2 வைர மோதிரம் இருந்தது. காய்கறிகள் வாங்கி விட்டு வீட்டுக்கு செல்ல குறளகம் பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தனர்.
 
அப்போது பணம் எடுப்பதற்காக மஞ்சுளா கைப்பையை பார்த்த அது திறந்து இருந்தது. அதில் இருந்த வைர நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். திருட்டு போன நகைகளின் மதிப்பு ரூ. 1 லட்சம் ஆகும். இதுகுறித்து அவர் எஸ்பிளனேடு போலீசில் புகார் செய்தார். உதவி கமிஷனர் முருகேசன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் அரி வழக்குப்பதிவு செய்து வைர நகைகளை அபேஸ் செய்த மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.