உயிரை தொலைத்தேன்
வி.ஜி. கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.ஞானமோகன் தயாரிக்கும் படம் உயிரைத் தொலைத்தேன். இதில் ராஜேஷ் கனகசபை நாயகனாகவும் அர்ச்சனா நாயகியாகவும் நடிக்கின்றனர்.
 
மற்றும் புதுமுகங்கள் பலர் நடிக்கின்றனர். இப்படத்துக்கு சக்திவேல் எஸ். கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். இவர் கந்தக்கோட்டை படத்தை டைரக்டு செய்தவர். வெளியூர்களில் இருந்து பிழைப்புக்காக சென்னை வந்து மேன்சன்களில் தங்கி வாழ்க்கைளை நகர்த்தும் இளைஞர்களின் காதல் மற்றும் போராட்டங்களை உள்ளடக்கிய கதையம்சம் உள்ள படமாக உருவாகிறது.
 
மேன்சனுக்கு புகழ் பெற்ற திருவல்லிக்கேணி பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. பாடல்களுக்கு இதில் முக்கியத்துவம் தரப்படுகிறது. இசை: திலீப்வர்மன், ஒளிப்பதிவு: எஸ்.பி.பாலாஜி, எடிட்டிங்: அத்தியப்பன் சிவா, ஸ்டண்ட்: சுப்ரீம் சுந்தர், நடனம்: அசோக்ராஜா, காதல் கந்தாஸ், பாடல்: விவேகா.