முடிஉதிர்வதை தடுக்கும் வழிகள் || hair failling
Logo
சென்னை 31-10-2014 (வெள்ளிக்கிழமை)
  • புனே அருகே 7 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்து
  • மராட்டிய மாநில் முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவியேற்பு
  • சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட 2.5 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்
  • ராமநாதபுரத்தில் போராட்டம்: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • இந்திரா நினைவுநாள்: பிரதமர் மோடி இரங்கல்
  • 30–ம் ஆண்டு நினைவு தினம்: இந்திரா சமாதியில் சோனியா, மன்மோகன், ராகுல் அஞ்சலி
  • தனியார் டி.வி.க்கு பணம் கைமாறிய வழக்கு: கனிமொழி உள்பட 19 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய உத்தரவு
முடிஉதிர்வதை தடுக்கும் வழிகள்
முடிஉதிர்வதை தடுக்கும் வழிகள்

 
முடிஉதிர்வதை தடுக்க ஆயில் மஸாஜ் மிகவும் சிறந்தவழி. ஆலிவ்எண்ணெய்,தேங்காயெண்ணெய்,இரண்டையும் லேசாக சூடுபடுத்தி தலையில் பூசி விரல் நுணியில் தலை முழுவதும்  முப்பது நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.
 
தலையில்எண்ணெயை தேய்க்கும்  போது அதன் மயிற்கால்களில் படும்படி பூசினால் மட்டும் போதும் அழூத்தி தேய்க்ககூடாது.பின்பு ஒரு கணமான துண்டை சுடு நீரில் முக்கி பிழிந்து தலையில் இறுக்கமாக சுற்றி அரைமணி நேரம் கழித்து தலை குளிக்கவேண்டும் .
 
இவ்வாறு தொடர்ந்து வாரம் ஒரு முறை செய்து வந்தால் முடிகொட்டுவது நின்று விடும். சராசரியாக ஒவ்வொருவரின் தலையிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முடிகள் காணப்படும். முடி உதிர்வது என்பது பெண்கள், ஆண்கள் என இருபாலருக்கும் உள்ள பொதுவான பிரச்னை.
 
இந்த முடி உதிரும் பிரச்னை ஏற்படும் போது, நாம் அனைவருமே மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்வதில் தான் அதிக அக்கறை காட்டுகிறோம். ஆனால் இயற்கையில் கிடைக்கும் சில பொருட்களைக் கொண்டும் கூந்தல் உதிர்வதைத் தடுக்க முடியும்.
 
இதோ சில டிப்ஸ்:
 
வெந்தயம்:
 
கூந்தல் உதிரும் பிரச்னை உடைய பெண்கள், சிறிதளவு வெந்தயத்தை 3 முதல் 4 மணி நேரம் ஊற வைத்து அரைத்து தலையில் தேய்த்து குளிக்க வேண்டும். வாரத்திற்கு இரு முறை இவ்வாறு செய்து வந்தால், கூந்தல் உதிர்வது படிபடியாக குறைத்து விடும்.
 
ஆலிவ் ஆயில்:
 
ஆலிவ் ஆயில்  முறையாக பயன்படுத்தி மசாஜ் செய்து வந்தால், அது கூந்தலை வலுப்படுத்துவதுடன், கூந்தல் உதிர்வது  மற்றும் முடி நரைத்தல் போன்றவை ஏற்படாமல் தடுக்கும். இது பொடுகை நீக்கும் இயற்கையான முறையாகவும் அமைகிறது. ஆலிவ் ஆயிலுடன் சம அளவு பாதாம் எண்ணெய்யை கலந்தும் பயன்படுத்தி வந்தால் பொடுகு தொல்லை நீக்கும்.
 
பசும்பால்:
 
புதிதாக காய்ச்சப் பட்ட பசும்பாலால் தலையில் மசாஜ் செய்து சிறிது நேரம் ஊறவிட வேண்டும். பின் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர, நாளடைவில் கூந்தல் உதிர்தல் குறைந்து விடும்.தேங்காய்
 
பால்:
 
தேங்காய்ப் பாலை தலையில் தேய்த்துவந்தால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். தேங்காய் துருவலை அரைத்து பால் எடுத்து அதை தண்ணீரில் கலந்து, மிதமாக சூடுபடுத்தி தலையில் தேய்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்த பின், குளிக்க வேண்டும். இவ்வாறு, தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில் நல்ல பலன் கிடைப்பதை பார்க்கலாம்.  
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - கூந்தல் பராமரிப்பு

தகவல் இல்லை