நகைச்சுவை உணர்வு மூலம் பெண்கள் கர்ப்பம் தரிக்க உதவும் கோமாளிகள் || pregnant women
Logo
சென்னை 06-03-2015 (வெள்ளிக்கிழமை)
நகைச்சுவை உணர்வு மூலம் பெண்கள் கர்ப்பம் தரிக்க உதவும் கோமாளிகள்
நகைச்சுவை உணர்வு மூலம்
 
 பெண்கள் கர்ப்பம் தரிக்க
 
 உதவும் கோமாளிகள்
நியூயார்க், ஜன. 14-
நகைச்சுவை உணர்வு மூலம் பெண்கள் கர்ப்பம் தரிக்க கோமாளிகள் உதவி வருகின்றனர்.  நோய் தீர்க்கும் சிறந்த மருந்தாக சிரிப்பு உள்ளது.தற்போது அதன் மூலம் ஏற்படும் மகிழ்ச்சி பெண்கள் கர்ப்பம் தரிக்கவும் உதவும் அருமருந்தாகவும் திகழ்கிறது.
 
இது குறித்து இஸ்ரேலை சேர்ந்த டாக்டர் ஷேவாச் பிரைட்லர் தலைமையிலான குழுவினர் சோதனை குழாய் மூலம் குழந்தை பெற சிகிச்சை பெற்றும் வரும் பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டனர்.  இவ்வாறு சிகிச்சை பெற்ற 219 பெண்கள் இந்த ஆராய்ச்சிக்கு எடுத்து கொள்ளப்பட்டனர். அவர்களுக்கு அறிவியல் ரீதியாக டாக்டர்கள் அளிக்கும் மருத்துவ சிகிச்சையின் இடையே கோமாளிகளின் நகைச்சுவையும் வழங்கப்பட்டது. அதற்காக தொழில் ரீதியான கோமாளிகள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சை பெறும் பெண்களிடம் நகைச்சுவையுடன் பேசி அவர்களின் மன அழுத்தத்தை போக்கினர்.  
 
அவ்வாறு அளித்த சிகிச்சைக்கு நல்ல பலன் கிடைத்தது. இதன் மூலம் 36 சதவீதம் பெண்கள் கருதரித்தனர். பொதுவாக இது போன்ற நேரத்தில் பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். மாறாக இந்த முறையிலாவது தாங்கள் கர்ப்பிணி ஆக வேண்டும் என்ற ஆதங்கம் அவர்களிடம் மேலோங்கி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, அவற்றை போக்கவே கோமாளிகள் பணியில் அமர்த்தப்பட்டனர்.
 
அவர்களின் நகைச்சுவை உணர்வே பெண்களின் மன அழுத்தத்தை நீக்கி அவர்கள் கர்ப்பம் தரிக்க உதவியது. இந்த தகவலை டாக்டர் பிரைட்லர் வெளியிட்டுள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

சீனாவில் ரயில் நிலையத்தில் 9 பயணிகளுக்கு கத்திகுத்து: கொடூரமான செயலில் ஈடுபட்டவரை சுட்டுக்கொன்றது சீன போலீஸ்

சீன தலைநகர் பீஜிங் அருகே உள்ள ரெயில் நிலையத்தில் 9 பயணிகளை சரமாரியாக கத்தியால் குத்தியவரை ....»

amarprakash160600.gif
amarprakash160600.gif