இந்திய கம்யூனிஸ்டு மாநாடு
Perambalur
வியாழக்கிழமை,
ஜனவரி 06,
3:13 PM IST
0
கருத்துக்கள்
பெரம்பலூர், ஜன.6-
பெரம்பலூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பகுதிக்குழு 6-வது மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பகுதிக்குழு செயலாளர் வீ.ஞானசேகரன் வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் அ.வேணுகோபால் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். தமிழ்நாடு விவசாய தொழிலாளர் ச ங் க த்தின்பொதுச்செயலாளர் மற்றும் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.முத்தரசன் சிறப்புரை ஆற்றினார்.
இதில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஜெயராஜ், ஒன்றிய செயலாளர்கள்ராசேந்திரன், ஆறுமுகம், காசிநாதன், ராமநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர். மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் நகர செயலாளர் கே.ஜெயராமன் நன்றி கூறினார்.
0
கருத்துக்கள்