Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
கண்டமங்கலம் அ.தி.மு.க தெருமுனை பிரசார கூட்டம், கண்டமங்கலம் வெயில் கொடுமைதொழிலாளி பலி, கள்ளக்குறிச்சி வாலிபர் கொலை, கள்ளக்குறிச்சி ஓடும் பஸ்நகை கொள்ளை, கள்ளக்குறிச்சி டீத்தூள் கடத்தல், கள்ளக்குறிச்சி மாணவி கடத்தல் திருமணம் போலீஸ் உறவினர்கள் புகார், குளிர்பான பாட்டில் கரப்பான் பூச்சி முட்டைகள் அதிகாரி வக்கீல் புகார், கூத்தாண்டவர் கோவில் அரவாணிகள் தாலி கட்டும் நிகழ்ச்சி, கூவாகம் கூத்தாண்டவர் கோவில் பூசாரிகள் தாலி நிகழ்ச்சி, கூவாகம் கூத்தாண்டவர் கோவில் அரவாணிகள், கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா அரவாணிகள், கொள்ளை, கொள்ளையர் போலீஸ் வேட்டை, சங்கராபுரம் தாய் தந்தை இளம்பெண் கடத்தல், லட்சம்
செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்: அரவைப்பணி பாதிப்பு
திருவெண்ணைநல்லூர், டிச. 17-
 
திருவெண்ணை நல்லூர் அருகே பெரிய செவலையில் செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த சக்கரை ஆலையில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
 
இவர்கள் தங்களுக்கு மின்வாரிய ஊழியர்களுக்கு இணையான சம்பளத்தை வழங்க வேண்டும், 6-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி ஊதிய விகிதத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொ.மு.ச. மன்ற தொழிற்சங்கத்தில் 3 நாள் தொடர் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்து இருந்தனர்.
 
அதன்படி அவர்கள் நேற்று வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இதில் சி.ஐ.டி.யூ., ஏ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இன்று 2-வது நாளாக அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தினால் கரும்பு அரவை பணிகள் நடைபெறவில்லை. இதனால் சர்க்கரை உற்பத்தி பாதிக்கப்பட்டு மேலும் கரும்பு அரவை பணி நடைபெறாததால் ஆலைக்கு கரும்பு ஏற்றி வந்த ஏராளமான லாரிகள், டிராக்டர்கள் ரோட்டில் அணிவகுத்து நின்றன.