Recommendations
Recent Activity
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அருந்ததியர் சான்றிதழ் பதிவு செய்ய மீண்டும் வாய்ப்பு
திருச்சி, டிச. 3-
 
திருச்சி மாவட்ட கலெக்டர் மகேசன் காசிராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
தமிழ்நாடு அரசுப்பணிகளில் ஆதிதிராவிடர்களுக் கான 18 சதவீத இட ஒதுக்கீட்டில் உள் இட ஒதுக்கீடாக 3 சதவீதம் அருந்ததியர் பிரவுக்கு அரசு ஒதுக்கீடு உள்ளது. வேலை வாய்ப்பு அலுவலக உயிர்ளப்ப பதிவேட்டில் ஆதிதிராவிடர் என்று மட்டுமே பதிவு மேற்கொண்டு வந்த நிலையில் அருந்ததியர் என்பதை தனியாக வகைப்படுத்தும் விதமாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதன் தொடர்ச்சி யாக அருந்ததியர் பிரிவை சேர்ந்தவர்கள் தாங்கள் அருந்ததியர் என்பதை குறிக்கும் வகையில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டும். அவ்வாறு பதிவு செய்தவர்கள் மட்டுமே அருந்ததியர் என பரிசீலிக்கப்படுவார்கள்.
 
தற்போது அருந்ததியர் பிரிவினர் மக்களின் கோரிக்கையை ஏற்று அருந்ததியர், பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்டவர்கள் அருந்ததியர் என்பதை குறிக்கும் வகையில் 10-ந் தேதிக்குள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே அருந்ததியர் என பதிவு செய்தவர்கள் மீண்டும் பதிவு செய்திட தேவையில்லை.
 
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.