செங்களாகுறிச்சி கால்வாயில்
ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி
தாலுகா அலுவலகம் முற்றுகை
Tirunelveli
ஞாயிற்றுக்கிழமை,
நவம்பர் 28,
4:07 PM IST
0
கருத்துக்கள்
நாங்குநேரி, நவ. 28-
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா ஏர்வாடியில் செங்களாகுறிச்சி கிராமத்திற்குட்பட்ட பள்ளி கொண்டான் குடியிருப்பு கிராமம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்திற்கு அருகே உள்ளது.
மழை காலங்களில் காட்டாற்று வெள்ளமும், விவசாய நிலங்களிலிருந்து வரக்கூடிய வெள்ளமும் சேர்ந்து செங்களாகுறிச்சி குளத்திற்கு வரக்கூடிய கால்வாய் மூலம் வரும்போது பெருவெள்ளம் ஏற்பட்டு விவசாய பயிர்களை சேதம் செய்யும் அபாயம் உள்ளது.
அதுமட்டுமின்றி ஊரின் நடுவே தண்ணீர் வருவதால் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளை நாசம் செய்து அவர்களின் குடியிருப்பு பகுதியை விட்டு வேறு இடங்களுக்கு பொது மக்கள் செல்ல வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவ -மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு அவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே போர் கால அடிப்படையில் மாவடி செங்களாகுறிச்சி குளம் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தாழ்வான பகுதி ஆழ்குழாய் கிணற்றை மாற்றி மேடான பகுதியில் அமைக்க வேண்டும். 26 மண் சுவராலான அனைத்து குடிசை வீடுகளையும் மாற்றி பாதுகாப்பான இலவச குடியிருப்பு வசதியை ஏற்படுத்தி வீடுகளை கட்டித்தர ஆவன செய்ய வேண்டும். மேற்கண்டவாறு பொதுமக்களால் கையெழுத் திடப்பட்ட மனுவை வட்டாட்சியரிடம் வழங்கி குழுத்தலைவர் ராமர் தலைமையில் 25 பெண்கள் உட்பட திரளானோர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
0
கருத்துக்கள்