Recommendations
Recent Activity
முன்கூட்டியே விடுதலை செய்ய நளினி மனு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு
சென்னை, நவ. 22-
 
ராஜீவ் கொலை குற்ற வாளி நளினி புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தார்.
 
இது சி.பி.ஐ. விசாரித்த வழக்கு என்பதால் மாநில அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது என்று தமிழக அரசு அவரது கோரிக்கையை நிராகரித்தது.
 
இதையடுத்து நளினி தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை தனி நீதிபதி விசாரித்து தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து நளினி மீண்டும் அப்பீல் செய்தார். அப்பீல் மனுவை டிவிசன் பெஞ்ச் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
 
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யுமாறு கேட்ட நளினி மீண்டம் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தர்மாராவ், ஹரி பரந்தாமன் ஆகியோர் 2 வார காலத்துக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.