Recommendations
Recent Activity
கட்டிடம் கட்டும்போது தோண்டப்படும் மணல்களை வேறு இடத்தில் கொட்ட 10 நாளில் அனுமதி கொடுக்க வேண்டும்; அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை, நவ. 16-
 
தமிழ்நாடு மண் அள்ளும் எந்திர உரிமையாளர் சங்க பொருளாளர் ராஜசேகர் ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில் கூறி இருப்பதாவது:-
 
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் கட்டிட இடிபாடுகளை பள்ளமான இடங்களில் கொட்ட அனுமதி பெற தேவை இல்லை.
 
ஆனால் கட்டிடம் கட்டுபவர்கள் தோண்டும் மணல்களை வேறு இடத்தில் கொட்டுவதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் இதற்காக அனுமதி கேட்டு விண்ணப்பம் கொடுத்தால் நீண்ட நாட்கள் கடந்தாலும் அனுமதி கொடுப்பது இல்லை. எனவே இதில் உடனடி முடிவு எடுத்து அனுமதி கொடுக்க கோர்ட்டு உத்தரவிட வேண்டும்.
 
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
 
இந்த மனு நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதை விசாரித்து தீர்ப்பு கூறிய அவர் கட்டிடம் தோண்டும் போது அதில் இருந்து எடுக்கப்படும் மண்களை வேறு இடத்தில் கொட்டுவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தால் மாவட்ட நிர்வாகம் 10 நாளில் உரிய முடிவு எடுத்து அனுமதிக்க வேண்டும்” என்றார்.