விலை
இளம்பெண்களை கடத்தி விபசாரத்தில் தள்ளும் கும்பல் பற்றிய கதை...
 
கிராமத்தில் வசிக்கும் நடுத்தர குடும்ப இளைஞன் பரணி.
 
பிளஸ்-2வில் தங்கை மாநில அளவில் முதலிடம் பிடித்ததால் என்ஜினீயரிங் படிக்க வைக்க விரும்புகிறார். இதற்காக அவரை சென்னை அழைத்து வருகிறார். வந்த இடத்தில் தங்கையை ஒரு டாக்சி டிரைவர் கடத்தி விடுகிறான். அவளை தேடி அலைந்து கிடைக்காமல் போலீசுக்கு போகிறார்.
 
போலீஸ் துணை கமிஷனர் சரவணன் இவ்வழக்கில் நேரடியாக இறங்கி பரணிக்கு உதவுகிறார். பரணி தங்கையையும் மேலும் சில பெண்களையும் விபசார கும்பல் ஆந்திராவுக்கு கடத்தி செல்கிறது. செல்போன் மூலம் சரவணனும், பரணியும் அவர்களை பின் தொடர்கின்றனர். விபசார விடுதியை கண்டு பிடிக்கின்றனர். பரணியின் தங்கை மீட்கப்பட்டாரா? என்பது கிளைமாக்ஸ்.
 
போலீஸ் துணை கமிஷனர் கேரக்டரில் கண்டிப்பும், ஆவசேமுமாய் பளிச்சிடுகிறார் சரவணன். விபசார கும்பலை பிடிக்க அவர் துப்பு துலக்கும் பாணி விறு விறுப்பு.
 
பிளாஷ்பேக் கதையில் உருக வைக்கிறார். கிளைமாக்சில் அதிர்ச்சியில் உறைவது உருக்கம்....
 
பரணி பாசக்கார அண்ணனாக முத்திரை பதிக்கிறார். தங்கயை காணாமல் கதறும் போதும்... கடத்தலை பெற்றோரிடம் மறைக்கும் போதும் மனதை கனக்க வைக்கிறார்.
 
விபசார கும்பல் தலைவன் ஜெமினி பாலாஜி, யோகி தேவராஜ், சந்துரு மூவரும் வில்லத்தனத்தில் மிரட்டுகின்றனர்.

தங்கையாக வரும் ரிது அழகில் பளிச். நடிப்பில் சத்து இல்லை. கடத்தல் கும்பலிடம் சிக்கும் உதயதாரா முடிவு பரிதாபம். விபசார கும்பல் தலைவியாக வரும் பாத்திமா கொடூர வில்லி. சேசிங் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் ஜி.காமராஜ். திரைக்கதையில் இன்னும் வலு சேர்த்து இருக்கலாம். இமான் இசையில் பாடல்கள் இனிமை.

மதிப்பீடு செய்க