கல்லூரி மாணவர்கள் ராக்கிங்கில் ஒரு மாணவி பாதிக்கப்படுகிறாள். அவளை ராஜன் பி.தேவ் மகன் கற்பழிக்கிறான். விஷயம் போலீசுக்கு போகிறது. மகனை காப்பாற்ற வழக்கை வாபஸ் பெறும்படி மிரட்டுகிறார் ராஜன் பி.தேவ். மாணவி மறுக்க அவளை கொன்று பிணத்தை ஆற்றுக்குள் வீசுகிறார்.
சில வருடங்களுக்கு பின் ராக்கிங்கில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள் ஒவ்வொருவராய் சாகின்றனர். மர்ம சாவுகள் காரணத்தை கண்டு பிடிக்க போலீஸ் அதிகாரிகள் கெட்டப் ராஜேந்திரன், ரியாஷ்கான் களம் இறங்குகின்றனர். அப்போது ராக்கிங் கொடுமையில் பலியான மாணவியின் ஆவிதான் கொலைகளை செய்கிறது என தெரிகிறது. மீதி இருப்பவர்களை காப் பாற்ற போலீஸ் முயற்சிக் கிறது. ஆவியிடம் இருந்து தப்பினார்களா? என்பது கிளைமாக்ஸ்.
கல்லூரி மாணவர்களின் ரகளையும், ராக்கிங்கும் யதார்த்தமாக காட்சி படுத்தப்பட்டு உள்ளது. மகனால் கெடுக்கப்பட்ட பெண்ணை ராஜன் பி.தேவ் கொல்வது கொடூரம். கெட்டப் ராஜேந்திரன் விசாரணைக்கு பிறகு கதையில் வேகம். ஆவியை தனது உடலில் ஏற்றி பழி தீர்க்கும் மனோ தத்துவ நிபுணரின் சஸ்பென்ஸ் எதிர்பாராதது. ஜெய்கிருஷ்ணா, பத்மகுமார், மைதிலி, பிருந்தா நடித்துள்ளனர். வி.எம். அருள்முருகன் இயக்கியுள்ளார். திரைக்கதை வலு வில்லாமல் நகர்கிறது.