ஷங்கரின் `ஆனந்தபுரத்து வீடு' படத்தில் வில்லனாக நடித்துள்ள கிருஷ்ணா, சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர். கே.பாலசந்தரின் `சஹானா,' நாகா டைரக்டு செய்த `சிதம்பர ரகசியம்' ஆகிய தொடர்களில் நடித்த இவர், இதய திருடா, அழகிய அசுரா ஆகிய படங்களில் வில்லன் ஆனார்.
ஷங்கரின் `ஈரம்' படத்தில், ஒரு வீட்டுக்குள் அடிக்கடி வந்து போகும் மர்ம ஆசாமியாக வந்தார். அதையடுத்து, `ஆனந்தபுரத்து வீடு' படத்தில் வில்லனாகி இருக்கிறார். 82 கிலோ எடையுடன் குண்டாக இருந்த இவர், `ஆனந்தபுரத்து வீடு' படத்துக்காக 72 கிலோவாக உடல் எடையை குறைத்து இருக்கிறார்.
ஈரம், ஆனந்தபுரத்து வீடு என ஷங்கர் படங்களில் அடுத்தடுத்து வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன் என்கிறார், கிருஷ்ணா!