Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
No Data Available..
முந்திரி சாப்பிட்டால் சிறுநீரகக் கல்
சிறுநீரில் கற்களை உருவாக்கக்கூடிய கால்சியம், ஆக்ஸலேட், பாஸ்பேட், யூரியா போன்ற உப்புகள் அதிக அளவு தேங்கிவிடும்போது அவை கற்களாக மாறி, சிறுநீரகத்தில் சேர்ந்து விடுகின்றன. ஒரு சில நேரங்களில் சிறுநீடன் ரத்தம் கலந்து வருவதற்கு இந்த கற்களே காரணமாகும்.
 
நிறைய தண்ணீர் குடித்தாலே சிறுநீரக கல் சிறுநீருடன் சேர்ந்து வெளியேறி விடும். சில நேரங்களில் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்ற வேண்டியிருக்கும். அறுவை இல்லாத நவீன சிகிச்சையும் உண்டு.
 
சிறுநீர் மூலம் வெளியேற வேண்டிய உப்புக்கள் அளவுக்கு அதிகமாகி விடும்போது வெளியேறத் தடை ஏற்படும். சிறுநீரகம், சிறுநீர்ப்பை மற்றும் இணைப்புக் குழாய்களில் அந்த உப்புக்கள் படிகம் போல் படிந்து, சிறுகச் சிறுக சேர்ந்து கல் போல மாறிவிடும்.
 
நெய், வெண்ணை, தக்காளி, முள்ளங்கி, பசலைக்கீரை, பட்டாணி, முந்திரி போன்றவற்றை அதிகம் உட்கொண்டால், சிறுநீரகக் கற்கள் தோன்றலாம்.
 
ஆண்களுக்கு சிறுநீர்ப்பையில் இருக்கும் புராஸ்டேட் சுரப்பி வயதான காலத்தில் வீங்கி விடும். சிலருக்கு சிறுநீர் இணைப்புக்குழாய்களில் சுருக்கம் உண்டாகும். இதனால் சிறுநீர் வெளியேற முடியாமல், சிறுநீரகத்திலும், சிறுநீர் பையிலும் தேங்கி கற்கள் உண்டாகி விடும். சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் நோய்த்தொற்றும் கற்கள் உண்டாக காரணமாகும்.
 
* வயிற்றுவலி, இடுப்புவலி, சிறுநீரில் ரத்தம் கலந்து போதல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், சிலநேரங்களில் குளிர் காய்ச்சல் போன்றவை அறிகுறிகளாகும்.
 
* சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் பக்க முதுகில் விலா எலும்புகளுக்குக் கீழ், திடீரென கடுமையான வலி உண்டாகி முன்வயிற்றுக்குப் பரவும்.
 
* சிறுநீர்ப்பை இணைப்புக் குழாய்களில் கல் இருந்தால் அடிவயிற்றில் வலி தோன்றி பிறப்புறுப்புக்குப் பரவும். சிறுநீர்ப்பையில் கல் இருந்தால் தொப்புளுக்கு கீழே வலி தொடங்கி சிறுநீர்ப்புற நுனிவரை பரவும்.
 
* சிறுநீர் கழிப்பதில் சிரமம், வலி, எரிச்சல், அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வும் இருக்கும்.
 
சிறுநீரகக் கற்கள் வராமலிருக்க டிப்ஸ்...
 
* ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் இளநீர், மோர் அதிகமாக குடிக்கலாம்.
 
* தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது, உடற்பயிற்சி செய்யுங்கள். அதன் மூலம் ரத்தத்தில் உள்ள கால்சியம் சத்து எலும்புகளுக்கு சென்றடையும்.
 
* பால், வெண்ணை, பூண்டு, கருணைக்கிழங்கு, பசலைக் கீரை, முள்ளங்கி போன்றவற்றை சாப்பிடக்கூடாது.
 
* உப்பைக் குறைத்தால் சிறுநீரகத்தில் கால்சியத்தின் கடுமை குறையும். ஒரு நாளைக்கு 2 முதல் 3 கிராமிற்கு மேல் உப்பு சேர்க்கக்கூடாது. பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் சிப்ஸ் வகைகளை குறைவாக சாப்பிட வேண்டும்.
 
* மக்னீசிய சத்துள்ள உணவு சாப்பிடுவது நல்லது. வைட்டமின் பி6 சிறுநீரில் உள்ள கற்களைக் குறைக்க உதவும்.
 
* நார்ச்சத்து மிகுந்த உணவை அதிகம் சாப்பிட வேண்டும்.
 
* காபி, டீ மற்றும் ஐஸ்கிரீம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
 
* பிறப்புறுப்பில் வலி, கீழ்முதுகில் வலி, விதைகளில் வலி இருந்தால் உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.