Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
No Data Available..
`திருமண வாழ்க்கையின் வெற்றி ரகசியம்!' - சபனா ஆஸ்மி
பிரபல நடிகையும், சமூக ஆர்வலருமான சபனா ஆஸ்மி, எப்போதும் உற்சாக முகம் காட்டுபவர். சமீபத்தில் ஒரு சிறுவிபத்துக்குள்ளாகி, காலில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டபோதும் சபனாவின் அந்த உற்சாகம் மாறவில்லை.
 
காலில் கட்டுப் போட்டபடியே, சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி வலம் வருகிறார். தனது தோழியான அபர்ணா சென்னின், `ஜப்பானிய மனைவி' பட சிறப்புக் காட்சிக்குச் செல்கிறார், தனது புதிய படமான `ஒண்டர்புல் லைப்'பின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்...
 
``எலும்பு முறிவு ஏற்பட்டதும் ஒருவகையில் நல்லதுதான். நான் எனது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட முடிகிறது. நிறையப் படிக்க முடிகிறது. அமைதியாகப் பொழுதைக் கழிக்க முடிகிறது. எலும்பு முறிவுக்கு நன்றி!'' என்று அடக்கமாகச் சிரிக்கிறார், சபனா.
 
புதிய பட வேடத்துக்காக 10 முதல் 11 கிலோ எடை கூட்டினாராம் சபனா. அதனால், குனிந்து ஷூ லேசை முடிச்சிடுவது கூட கஷ்டமாகி விட்டதாம்.
 
``தற்போது நான் உடல் எடையில் பெருமளவைக் குறைத்து விட்டேன். ஆனாலும் எடை கூடியதன் தாக்கம் இன்னும் இருக்கிறது. கால் முறிந்து தற்போது ஒரே இடத்தில் இருக்க வேண்டியிருப்பதால் எங்கே மறுபடி எடை கூடிவிடுமோ என்று பயப்படுகிறேன்'' என்கிறார் சபனா.
 
சபனாவின் கணவர், இந்தித் திரையுலகின் பிரபல பாடகர் ஜாவித் அக்தர். "பல்லாண்டுகளாக சுமூக நடை போட்டுக் கொண்டிருக்கும் உங்களது திருமண வாழ்க்கையின் வெற்றி ரகசியம் என்ன, திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பதை நீங்கள் நம்புகிறீர்களா?'' என்று கேட்டால், சிரிக்கிறார் சபனா.
 
``அதெல்லாம் இëல்லை. நானும் எனது கணவரும் அதிகம் சந்தித்துக் கொள்வதில்லை. அதனால்தான் எங்கள் திருமணம் இவ்வளவு நாளைக்கு நீடிக்குதுன்னு நினைக்கிறேன் (குறும்புச் சிரிப்பு!). நானும் ஜாவித்தும் நல்ல நண்பர்கள். `நமது நட்பை திருமணத்தால் கூடக் கெடுக்க முடியவில்லை' என்று `ஜோக்'கடிப்பார் அவர்.
 
இருவரும் திரையுலகில் ஓடிக் கொண்டே இருப்பதால் சந்திப்பதற்கு நேரம் கிடைப்பது அரிதானது என்றாலும், அபூர்வமாக இருவரும் ஒன்றாக இருக்கும் நேரம் அற்புதமாக இருக்கும்'' என்கிறார் சபனா.
 
``ஜாவித்துக்கு அபாரமான நினைவாற்றல். அவர் பாடல்களை வரி மாறாமல் பாடுவார். நான் அதை ரசித்துக் கேட்பேன்'' என்று கூறும் சபனா, அது தனக்கும் பழக்கமான விஷயம் என்கிறார். காரணம், அவரது அப்பாவான கைபி ஆஸ்மியும் புகழ்பெற்ற கவிஞர், பாடலாசிரியர்.