Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
No Data Available..
பற்கடித்தல்...
பிரஷ்ஷை அழுத்தமாக தேய்த்தால் பல் வெண்மை ஆகும் என்று நினைக்கிறோம். அப்படிச் செய்தால், பல்லின் `எனாமல்' தான் பாழாகும். மிருதுவான குச்சம் உள்ள பிரஷ்ஷைத்தான் பல் துலக்கப் பயன்படுத்த வேண்டும்.
 
* ஒவ்வொரு தடவையும் 5 நிமிடங்களுக்குக் குறையாமல் தினமும் 2 அல்லது 3 தடவை பல் துலக்க வேண்டும். பற்களில் கறை கடினப்படுகிறபோது பிளேக்காக மாறி ஈறுகளை வீங்கச் செய்து விடுகிறது. தரமான மவுத்வாஷை உபயோகித்து வர, ஈறு வீக்கம் குறையும்.
 
* பற்கூச்சம் போக, புளோரைடு கலந்த பற்பசைகளை பயன்படுத்த வேண்டும். பற்களை முறையாக துலக்க வேண்டும்.
 
* அதிக சூடான அல்லது குளிர்ச்சியான உணவுப் பொருட்கள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இரண்டு வெவ்வேறான வெப்பநிலை உள்ள உணவுகளை ஒரே நேரத்தில் சாப்பிடக் கூடாது.
 
* சிலர் பற்களை இரவில் `நறநற'வென்று கடிப்பதைப் பார்த்திருப்போம். உணர்வுகளை அடக்கி வைப்பதால் நாளடைவில் மனஅழுத்தம் ஏற்படுகிறவர்கள் இப்படிச் செய்கிறார்கள். இதனால் பற்களில் உள்ள எனாமல் சிதைந்து பற்கூச்சம் ஏற்படுகிறது. இவர்கள் மனஅழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும். இசை கேட்பது, தியானம் செய்வது போன்றவை பயன்தரும்.
 
* உங்களுடைய கீழ் வரிசைப் பற்கள், மேல் வரிசைப் பற்களை மெல்லும்போது, விழுங்கும்போது, பேசும்போது மட்டுமே தொடுகிறது. மற்ற நேரங்களில் பற்கள் தொட்டுக் கொண்டு இருக்கக்கூடாது.
 
* பிரஷை 45 டிகிரி கோணத்தில் வைத்து பல்துலக்கினால் பற்களோடு, ஈறுகளும் சுத்தமாகும். மேலும், கீழும் உள்ள ஈறுகளை கைவிரல்களால் `மசாஜ்' செய்து விடுவதும் பலனளிக்கும்.
 
* ரத்தம் வடிகிற ஈறுகளை வைட்டமின் `சி' குணப்படுத்தும். காய்கறிகளில் காலிபிளவர், தக்காளி, ஆரஞ்சு, எலுமிச்சை பழங்களில் வைட்டமின் `சி' அதிகம் உள்ளது.