Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
No Data Available..
பிரசவத்துக்குப் பின்னும் அழகாக இருக்க...
 திருமணம், குழந்தைப்பேறு போன்ற விஷயங்கள் பெண்களுக்கு சந்தோஷ அனுபவங்கள் என்றாலும், அவற்றின் மூலம் அவர்கள் இழக்கும் விஷயங்களும் நிறைய உள்ளன. குழந்தை பெற்றுக் கொள்வதெனத் தீர்மானித்து விட்டீர்களா? அதற்கு முன்பாக நீங்கள் அனுபவித்து மகிழ வேண்டிய சில விஷயங்கள் இதோ...
 
* கரு உண்டாகும் வரை நீங்கள் கல்லைத் தின்றாலும் சொரிக்கும். கருத்தாரித்த பிறகு நீங்கள் உட்கொள்ளும் ஒவ்வொரு உணவும் மிக மிக சுத்தமானதாக, ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். தவிர உங்கள் விருப்பப்படி எதை வேண்டுமானாலும் சாப்பிடவும் முடியாது. அது கூடாது, இது கூடாது என்று கட்டுப்பாடாக இருந்தாக வேண்டும். எனவே கர்ப்பம் தாரிப்பதற்கு முன்பே நாவை அடக்காமல் விரும்பியதை ஒரு பிடிபிடியுங்கள்.
 
* சூரிய வெளிச்சம் முகத்தில் படும்வரை தூங்குவதென்பதெல்லாம் நீங்கள் கர்ப்பம் தாரிக்கும் வரைதான். பிறகு உங்கள் தூக்கம் பாதிக்கப்படும். குழந்தை பிறந்த பிறகு பல தூக்கமில்லாத இரவுகளுக்கு நீங்கள் பழக்கப்பட்டாக வேண்டும். எனவே கர்ப்பம் தாரிக்கும் முன்பே தூக்கத்தையும் அனுபவித்து விடுங்கள்.