Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
No Data Available..
அழகு முகத்திற்கு...
உடம்பில் மிகவும் `சென்சிட்டிவ்வான' உறுப்பு முகம். முக சருமமே வெயில், மழை மற்றும் பனியால் அதிகம் பாதிaக்கப்படுகிறது. கரும்புள்ளி, முகப்பரு, வடு, போன்ற சரும பிரச்சினைகள் முகத்திலேயே ஏற்படுவதால் முகசருமத்தை கவனமாக பாதுகாக்க வேண்டும். காட்டன் பஞ்சு மூலம் கெட்டியான பால் எடுத்து முகத்தில் பூச வேண்டும். ஒரு மணிநேரம் கழித்த பின்னர், முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்தால் முகம் பொலிவாகும்.
 
தவிர்க்க வேண்டிய விஷயங்கள்...
 
* சருமம் தொடர்பான கிரீம்களை பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். ஏதேனும் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் தோல் நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
 
* அழகுப் பொருட்களால் சில நேரங்களில் அலர்ஜி உருவாகும். அந்தப் பொருளை நம்முடைய சருமம் ஏற்றுக் கொள்ள வில்லை என்பதே இதற்கு அர்த்தம். அதனால் முதலிலேயே அவற்றை சருமம் ஏற்றுக் கொள்ளுமா? என்று சோதித்து பார்த்துக் கொள்வது நல்லது.
 
* பெரும்பாலான அழகு சாதனப் பொருட்களில் ரசாயனப் பொருட்களை கலந்திருப்பார்கள். அது உங்களுடைய சருமத்தில் இருக்கும் எண்ணைத் தன்மையை பாதிக் கும் என்பதால் சருமநிபுணரின் ஆலோசனையை கேட்டு பயன்படுத்தவும்.