மேக்கப்பை கழுவ...
Chennai
புதன்கிழமை,
மார்ச் 10,
10:37 AM IST
0
கருத்துக்கள்
பண்டிகை, விழா மற்றும் பார்ட்டிகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பியபின்னர், தூங்கச் செல்வதற்கு முன்பாக மேக்கப்பை நன்றாக கழுவி விடவும். இதனால் சருமத்தின் இயல்புத்தன்மை பாகாக்கப் படும். மேக்கப்பை கழுவி சுத்தம் செய்யும் போது மிகவும் கவனமாக செய்ய வேண்டும். இல்லாவிட்டால் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்பட்டு விடும். குறிப்பாக கண்களைச் சுற்றியிருக்கும் மேக்கப்பை கலைப்பதற்கு பேபி ஷாம்புவை பயன்படுத்துவது சிறந்த வழி. இரண்டு சொட்டு பேபி ஷாம்புவை எடுத்து கைவிரல்களில் தடவிக் கொண்டு, கண் இமை மற்றும் கண்ணைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடவவும். பின்னர் நன்றாக கண்களை மூடிக் கொண்டு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். பின்னர் தூங்கினால் நன்றாக தூக்கமும் வரும். சருமத்திற்கும் பாதுகாப்பு.
0
கருத்துக்கள்